நடிகர் ரிஷி கபூர் இன்று காலை உயிரிழந்ததை அறிந்து, அவருடைய வருங்கால மருமகள் ஆலியா பட், அவரச அவரசமாக மருத்துவமனைக்கு, காரில் விரைந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் ரிஷி கபூர் இன்று காலை உயிரிழந்ததை அறிந்து, அவருடைய வருங்கால மருமகள் ஆலியா பட், அவரச அவரசமாக மருத்துவமனைக்கு, காரில் விரைந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
மும்பையில் கடந்த 2018 ஆம் ஆண்டு, மே மாதம் நடைபெற்ற பிரபல பாலிவுட் நடிகை சோனம் கபூர், தொழிலதிபர் ஆனந்த் அஹுஜா திருமணத்தில், பிரபல நடிகரான ரன்பீர் கபீரும், பிரபல நடிகையான அலியா பட்டும் ஜோடியாக கலந்து கொண்டதால் இவர்கள் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி தீயாய் பரவியது.
இந்த செய்தியை நிஜமாக்குவது போல், இருவரும் ஜோடியாக பல திரைப்பட நிகழ்ச்சிகளிலும், கலந்து கொண்டு இருவருக்கும் உள்ள காதலை உறுதிசெய்தனர்.
ஆலியா பட் - ரன்பீர் கபூர் இருவருக்கும் கடந்த ஆண்டே திருமணம் நடைபெற இருந்த நிலையில், ரிஷி கபூர் புற்று நோய் காரணமாக வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்ததால், 2020 ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடைபெறும் என கூறப்பட்டது.
டிசம்பர் மாதம் இவர்களுடைய திருமணத்தை, இருவீட்டை சேர்ந்தவர்களும் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது... ரிஷி கபூர் மரணத்தால் இவர்களுடைய திருமண நடைபெறுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று காலை 5 :30 மணி அளவில், தன்னுடைய வருங்கால மாமனார் இறந்த செய்தியை அறிந்த ஆலியா பட் அவசர அவரசமாக தன்னுடைய காரில், மும்பையில் இருந்த எச்.என்.ரிலையன்ஸ் மருத்துவனைக்கு வந்த சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அவற்றில் சில புகைப்படங்கள் இதோ...