
குழந்தை பிறந்த பின்பு, பொதுவாக பெண்களின் எடை அதிகரித்து விடும். அதனை குறைப்பது சாதாரண விஷயம் அல்ல அதிகப்படியான உடல் உடற்பயிற்சி மற்றும் முறையான டயட் என பலவற்றை கையாண்டு தான் ஏறிய எடையை குறைக்க முடியும்.
ஆனால் இப்படி செய்வது வெகு சிலரே, பல பெண்கள் குழந்தை பிறந்த பின் ஏன் எடையை குறைக்க வேண்டும் என எண்ணி, அதனை பெரிதாக கண்டுகொள்வதில்லை. உடல் எடை அதிகரிப்பதால் வரும் ஆபத்துகளையும் உணர்வதில்லை.
இந்நிலையில் குழந்தை பிறந்த பின், அழகை எப்படி மேன்படுத்தி கொள்வது என்பது பற்றி கூறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
இதுகுறித்து அவர் கூறுகையில்... "குழந்தை பிறந்த பின்பு என் உடல் எடை மிகவும் அதிகரித்துவிட்டது. குழந்தையை தனியே விட்டு விட்டு வெளியே போக முடியாத நிலையில், வீட்டிலேயே உடற்பயிற்சியை ஆரம்பித்தேன். தாயான பின்பு மருத்துவர் அறிவுரைப்படி தான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சிசேரியன் என்றால் 40 நாட்கள் கழித்து தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும். சுகப்பிரசவம் என்றால் ஒரு வாரத்தில் ஆரம்பித்து விடலாம். நமது உடல் வாகுக்கு எந்த பயிற்சி ஏற்றது என்பதை அதற்குரிய நிபுணர்கள் தான் நமக்கு கூறவேண்டும்.
எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான உடற்பயிற்சி பொருந்தாது. உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உணவிலும் கட்டுப்பாடு தேவை. எனக்கு எண்ணெயில் வறுத்த பொரித்த உணவு வகைகள் பிடிக்கும். உடல் எடையை குறைக்க அவைகள் மீதான ஆசையை துறந்தேன். ஜங்க் ஃபுட் அறவே கிடையாது. வேக வைத்த காய்கறிகள், பழங்கள், சாலட் போன்ற உணவு வகைகள் தான் என் சாப்பாட்டில் இடம்பெற்றிருந்தது.
ஒருசேர அனைத்தையும் கஷ்டப்பட்டு, கடைப்பிடித்த பின்புதான் உடல் எடையில் குறிப்பிட்ட மாற்றம் தெரிந்தது. மகிழ்ச்சியோடு அதை தொடர்ந்தேன் எப்படியோ என் உடல் அழகை மீட்டெடுத்து விட்டேன். இப்போது நடிக்கவும் செய்கிறேன். இது போன்ற மற்ற பெண்களும் தங்களுடைய உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.