
பிரபல மலையாள இளம் நடிகை அர்ச்சனா கவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் மிக பெரிய விபத்தில் இருந்து தப்பியுள்ளனர். இந்த தகவலை நடிகை அர்ச்சனா கவி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அர்ச்சனா கவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் கொச்சி விமானநிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களுடைய வாகனம் ஆளுவா அருகே வந்த போது, கொச்சி மெட்ரோ ரயில் தூணில் இருந்து கான்கிரீட் கல் உடைந்து ஓடிக்கொண்டிருந்த கார் மீது விழுந்தது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகை அர்ச்சனா கவி மற்றும் அவருடைய குடும்பத்தினர் உயிர் தப்பினர். இவர் காரின் முன் பகுதி முழுமையாக சேதம் அடைந்தது. ஆனால் உள்ளே இருந்தவர்களுக்கு எந்த அடியும் ஏற்படவில்லை.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை தெரிவித்துள்ள நடிகை அர்ச்சனா கவி , கொச்சி மெட்ரோ நிர்வாகம் மற்றும் கொச்சி போலீசார் இந்த சம்பவத்தின் மீது அக்கறை எடுக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என வேண்டுகோள் ஒன்றையும் வைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.