
தமிழ் சினிமாவில், சிறு சிறு வேடங்களில் நடித்து, தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் காமெடி வேடத்திலும், கதையின் நாயகனாகவும் நடித்து வரும், நடிகர் யோகி பாபு வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வரும் பெப்சி தொழிலாளர்களுக்கு உதவியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், தமிழக மக்களையும் அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கத்தை கட்டு படுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கூலி வேலை செய்து வரும் பலர் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சினிமா திரையுலகை நம்பி கூலி வேலை செய்து, பிழைப்பை ஓட்டி வந்த பெப்சி தொழிலாளர்கள் சாப்பாட்டிற்கு கூட வழி இல்லாமல் கஷ்டப்படும் நிலையை ஏற்பட்டதை தொடர்ந்து, அவர்களுக்கு உதவும் விதமாக, பிரபலங்கள் பலர் அரிசியாகவும், பணமாகவும் கொடுத்து உதவி வருகிறார்கள்.
ஏற்கனவே நடிகர் சூர்யா, சிவகார்த்திகேயன், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விஜய் சேதுபதி, ரஜினிகாந்த், உள்ளிட்ட பலர் உதவியுள்ள நிலையில், நடிகர் யோகி பாபு பெப்சி தொழிலாளர்களுக்கு உதவும் விதமாக அரிசி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.