
தான் திருமணம் செய்துக்கொள்ள இருக்கும் பெண்ணை தினமும் நேரில் பார்த்துக் கொண்டிருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்து உள்ளார்
இரும்புத்திரை’ வெற்றி விழாவில் நடிகர் விஷால் கலந்துக்கொண்டு படத்தின் கதை குருத்தும், அவருடைய அரசியல் விருப்பம் குறித்தும் பேசி உள்ளார்.
அதாவது,அண்மையில் வெளியான 'இரும்புத்திரை' படம் டிஜிட்டல் இந்தியாவுக்கு எதிரான படமாக எடுக்கப்பட்டு இருந்தது. ஆதார் அட்டை முதல் தேர்தல் முறை வரை எல்லா மின்னணு செயல்பாடுகளில் இருக்கும் சிக்கல்களை அலசி இருந்தது.
இந்த படத்தை பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பல சுவாரஸ்ய பதிகளை அளித்துள்ளார் நடிகர் விஷால்.
அப்போது மின்னணி வாக்குப்பதிவு எந்திரம் பற்றி கேட்டபோது,
‘எனக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை. வாக்குசீட்டு முறையை தான் நம்புகிறேன். என்னிடம் ஆதார் அட்டை இருக்கிறது. ஆனால் இன்னும் வங்கியில் அதை இணைக்கவில்லை. முன்பைவிட இப்போது இன்னும் விழிப்புணர்வோடு இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
மேலும், மெர்சல் படம் போன்று ஏன் இந்த படம் அதிக விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை என்றால், படத்தில் காட்டப்பட்டுள்ள அனைத்தும் உண்மை தான் என்பதை அனைவருமே ஒப்புக்கொள்ளும் விதத்தில் உள்ளது என தெரிவித்து உள்ளார்
ஒரு வேலை அதிகம் முக்கியத்துவம் கொடுத்து, விமர்சனம் எழுந்திருந்தால் இந்த படத்தில் ப்ரோமோஷன் கிடைத்திருக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை
ஜனவரியில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்படும்
அதற்கு முன்பாக ஜனவரியில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு அடுத்த முகூர்த்த நாளிலேயே அங்கே தனது திருமணம் நடக்கும் என்றும் கூறினார்.
மணப்பெண் யார் என்று கேட்டதற்கு ‘அவரை தினமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்’ என்று மறைமுகமாக சொன்னார். தினமும் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த அமணப்பெண் யார் என்று எல்லோராலும் எளிதில் யூகிக்கப்படும் நபர் வரலக்ஷ்மி தான் .
ஏற்கனவே இவர்கள் இருவரும் பல ஆண்டு காலமாக காதலித்து வருவதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அதுமட்டு இல்லாமல், சமீபத்தில் நடிகர் விஷால் கொடுத்த பேட்டியில் கூட வரலக்ஷ்மி பற்றி பொக்கிஷம் என கூறி புகழ்ந்து தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.