
கோலிவுட் திரையுலகில் நடிகர் விஜயின் ரசிகர்கள் பலம் பற்றி சொல்லவே வேண்டாம். சிறு குழந்தைகள், முதல் இளைஞர்கள், பெண்கள் என அனைவருமே இவர் மீது தங்களுடைய அன்பை பொழிந்து வருகிறார்கள்.
குறிப்பாக சில ரசிகர்கள் விஜயை எங்கு பார்த்தாலும், தங்கள் உயிரை கூட பெரிதாக கருதாமல் அவருடைய காரை, துரத்தி வந்து ஒருமுறையாவது அவருடைய முகத்தை பார்த்து விட்டு செல்வார்கள்.
அந்த வகையில் தற்போது ஒரு ரசிகர் விஜயின் காரை துரத்தி வந்து அவரை பார்க்க முயலும் போது, அந்த ரசிகனின் நலன் கருதி, விஜய் அவரிடம் கெஞ்சுவது போல்... சைகை செய்து போய் விடுங்கள் என கூறுகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தின் படப்பிடிப்பு, எஸ்.ஆர். எம். கல்லூரியில் நடைபெற்று வருகிறது. சென்னையிலேயே படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், அடிக்கடி ரசிகர்கள் விஜயை பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நாள் தோறும் இது போன்ற விடியோக்கள் வெளியாகி வருகிறது.
அட்லீ இயக்கம் இந்த படத்தை, ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.