5 ஆண்டுகளாக வரி கட்டாமல் ஏமாற்றியவர் விஜய்..! வருமான வரித்துறை வெளியிட்ட தகவல்!

By Selva KathirFirst Published Feb 7, 2020, 11:17 AM IST
Highlights

5 ஆண்டுகளாக வருமான வரி கட்டாமல் விஜய் ஏமாற்றியுள்ளதாக வருமான வரித்துறை வெளியிட்ட தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.

இப்போது விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது போலவே கடந்த 2015ம் ஆண்டும் ரெய்டு செய்யப்பட்டது. விஜய் வீடு மட்டும் அல்லாமல் நடிகைகள் சமந்தா, நயன்தாரா வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது. மேலும் புலி படத்தை தயாரித்த ஷிபு தமீம், பிடி செல்வக்குமார் வீடு, அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினல் சோதனை மேற்கொண்டனர். தற்போது சோதனைக்கு ஆளாகியுள்ள பைனான்சியர் அன்புச் செழியன் வீடும் ரெய்டுக்கு உள்ளாக்கப்பட்டது. 2015ம் ஆண்டு இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த சோதனை குறித்து அப்போது இந்து ஆங்கில நாளிதழ் ஒரு செய்தி வெளியிட்டது. அதிலும் வருமான வரித்துறை சோதனையின் போது விஜய், சமந்தா, நயன்தாரா ஆகியோர் தொடர்புடைய இடங்களில் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் ரொக்கம், தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை கூறியதாக இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

மேலும் யார் யார் எத்தனை ஆண்டுகள் வரி ஏய்ப்பு செய்தனர் என்கிற விவரமும் வெளியாகியிருந்தது. அதாவது விஜய் உள்ளிட்டோர் வருமான வரி செலுத்தியிருந்தாலும் தங்கள் வருமானத்திற்கு அவர்கள் முறையாக முழுமையாக வரி செலுத்தவில்லை என்று தி இந்துவிடம் வருமான வரித்துறை அப்போது கூறியிருந்தது. இப்படியாக நடிகர் விஜய் 5 ஆண்டுகள் வரி செலுத்தாமல் விஜய் ஏமாற்றியிருப்பதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாக த இந்து கூறியிருந்தது.

ஆனால் இந்துவில் வெளியான இந்த தகவலை விஜய் தரப்பு அப்போது மறுத்திருந்தது. அதாவது விஜய் தான் முறையாக வருமான வரி செலுத்துவதாகவும் எங்கும் வரி ஏய்ப்பில் ஈடுபடவில்லை என்றும் கூறியிருந்தது. ஆனால் வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் குறித்து அப்போது முதல் இப்போது வரை விஜய் தரப்பு வாய் திறக்கவில்லை. சுமார் 5 வருடங்களுக்கு பிறகு இப்போது மறுபடியும் விஜய் வீட்டில் ரெய்டு நடைபெற்றுள்ளது.

இங்கு என்ன நடைபெற்றுள்ளது என்பது விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கலாம்.

click me!