
புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாக முடியாமல் வீட்டில் சுமார் மூன்று வருடங்களுக்கும் மேல் முகாமிட்டிருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, தான் அடுத்து கமலின் ‘தலைவன் இருக்கிறான்’படத்தின் மூலம் அதிரடியாக ரீ எண்ட்ரி கொடுக்கவிருப்பதாக வதந்திகளைக் கிளப்பியுள்ளார்.
கடந்த இரு மாதங்களாகவே வடிவேலு விரைவில் புதிய படங்களில் நடிக்கப்போகிறார். அதோ வருகிறார், இதோ வருகிறார், வந்தே விட்டார் என்கிற ரேஞ்சுக்கு பில்ட் அப்கள். ஆனால் குறிப்பிட்ட நிறுவனத்தின் பெயர்களோ,இயக்குநர் பெயர்களோ இல்லாமல் அவ்வாறு வெளிவந்த செய்திகளுக்குப் பின்னால் இருந்த சூத்ரதாரியே வடிவேல்தான் என்கிறார்கள்.
ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துடனான பிரச்சினை சுமுகமாக முடியாத நிலையிலும் அவர்களை எதிர்த்துக்கொண்டு யாராவது நம்மைக் கமிட் பண்ண மாட்டார்களா என்ற நப்பாசையில்தான் அச்செய்திகளை வடிவேலு கிளப்பி விடுகிறாராம். அந்த வரிசையில் தற்போது லேட்டஸ்டாக கமலின் ‘தலைவன் இருக்கிறான்’படத்தில் வடிவேலு அவருக்கு இணையான வேடத்தில் நடிக்கவிருப்பதாக ஒரு செய்தி தீயாய்ப் பரவி வருகிறது. இந்தச் செய்தியில் உள்ள பெரிய காமெடி என்னவெனில் அப்படம் நடக்குமா என்பதே இதுவரை கமலுக்குத் தெரியாது. ‘இந்தியன் 2’நல்லபடியாக முடிந்தால் மட்டுமே ‘தலைவன் இருக்கிறான்’படத்தைத் தயாரிப்போம் என்று லைகா நிறுவனம் கறாராக அறிவித்துள்ளது. கமலே இல்லாத படத்தில் வடிவேலு இருக்கிறாராம். ஹைய்யோ ஹையோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.