
கடந்த மாதம் 20-ந் தேதி அன்று, சில கொள்ளையர்கள் பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் உள்ள வீட்டில் புகுந்து, சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் என்பவரது குடும்பத்தினர் அனைவரையும் சரமாரியாக தாக்கினர். இதில் சுரேஷ் ரைனாவின் மாமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
தற்போது சுரேஷ் ரெய்னாவின் அத்தை, மற்றும் மூன்று சகோதரர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ரெய்னா.
இந்த நிலையில், தனது உறவினர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து டுவிட்டரில் மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்... இதில், பஞ்சாப்பில் என் குடும்பத்துக்கு நேர்ந்தது கொடூரமானது. என் மாமா படுகொலை செய்யப்பட்டுள்ளார். என் அத்தையும் சகோதரர்களும் பலமாகக் காயமடைந்துள்ளார்கள். துரதிர்ஷ்டவசமாக உயிருக்குப் போராடிய என் சகோதரரும் நேற்றிரவு மரணம் அடைந்துள்ளார். என் அத்தை உயிருக்குப் போராடி வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, எனவே இந்த வழக்கு மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, பஞ்சாப் காவல் துறைக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.
இவருடைய ட்விட், சமூக வலைத்தளத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது நடிகர் சூர்யா, சுரேஷ் ரெய்னாவின் குடும்பத்தில் இறந்தவர்களுக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்து, "நாங்கள் அனைவரும் உங்களுடைய சோகத்தை தோளில் சுமக்கிறோம், இதயமற்ற இந்த குறைவாலும் தண்டனை வழங்கிட வேண்டும். என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.