சென்னைக்குத் திரும்புகிறார் பாங்காங்கில் பதுங்கியிருந்த சிம்பு...என்ன நடக்கப்போகுது தெரியுமா?...

Published : Sep 20, 2019, 06:20 PM IST
சென்னைக்குத் திரும்புகிறார் பாங்காங்கில் பதுங்கியிருந்த சிம்பு...என்ன நடக்கப்போகுது தெரியுமா?...

சுருக்கம்

 அந்தப்பட்டியலில் கடைசியாக சிக்கிய சூர்யாவின் பினாமி ஞானவேல் ராஜாவும் ‘மாநாடு’படத்தை துணிந்து டிராப் செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் சிம்புவால் வாழ்விழந்தோர் சங்கம் ஒன்றைத் துவக்க முயலவே அதை மோப்பம் பிடித்த சிம்பு வெளிநாடுகளுக்கு உல்லாசப்பயணம் என்ற பெயரில் விஜய் மல்லையா போலவே தப்பி ஓடினார்.

இன்னும் கொஞ்சநாள் தலைமறைவாக இருந்தால், தமிழ் சினிமா தயாரிப்பாளர்களும் தன்னை  முற்றிலும் மறந்துவிடுவார்கள் என்கிற பயத்தில், சுமார் ஒன்றரை மாதத்துக்கும் மேலாக பாங்காங்கில் பதுங்கியிருந்த நடிகர் சிம்பு நாளை சென்னை திரும்புவதாக அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மணிரத்னத்தின் ‘செக்கச்சிவந்த வானம்’ தவிர்த்து தான் நடித்த அத்தனை படங்களிலும் பஞ்சாயத்துக்களுக்கு பஞ்சமில்லாமல் நடித்து வந்தவர் சிம்பு. சமீப காலங்களில் ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களிடம் பெரும் தொகைகளை அட்வான்ஸாக வாங்கிய அவர் சொன்ன்படி படம் நடித்துத் தரவில்லை. அந்தப்பட்டியலில் கடைசியாக சிக்கிய சூர்யாவின் பினாமி ஞானவேல் ராஜாவும் ‘மாநாடு’படத்தை துணிந்து டிராப் செய்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் சிம்புவால் வாழ்விழந்தோர் சங்கம் ஒன்றைத் துவக்க முயலவே அதை மோப்பம் பிடித்த சிம்பு வெளிநாடுகளுக்கு உல்லாசப்பயணம் என்ற பெயரில் விஜய் மல்லையா போலவே தப்பி ஓடினார்.

அந்த சம்பவம் முடிந்து சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில் நாளை அவர் சென்னை திர்ம்புவதாகவும், வந்தவுடன் தனது ரசிகர் மன்றத்தை வலுப்படுத்தப்போவதாகவும் ,இனிமேல் ஒரு புதிய சிம்புவை தமிழ் சினிமா தரிசிக்கப்போகிறதென்றும் அவரது அல்லக்கைகள் சிலர் ட்விட்டர் பதிவுகள் போட்டு வருகிறார்கள். நாளை சனிக்கிழமை என்பதால் ஒரு நாள் ஓய்வு கொடுத்துவிட்டு ஞாயிறன்று அவரால் பாதிக்கப்பட்ட சங்கம் பஞ்சாயத்தைக் கையிலெடுக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி