
நடிகர் சிம்பு என்று சொன்னாலே இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு விதமான உற்சாகம் இருக்கும்..தல அஜித்துக்கு எப்படி ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதே போன்று நடிகர் சிம்வுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு..
நடிகர் சிம்பு எதை செய்தாலும் அதை ரசித்து பார்க்க ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் அவ்வப்போது நடிகர் சிம்பு பற்றி சர்ச்சை வந்த வண்ணம் இருந்தாலும் இவர் யாரை தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்ற கேள்வி அவ்வப்போது எழும். இவரின் ரசிகர்களுக்கும் அதே யோசனை தான் எப்போது தான் திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்று தெரியவில்லையே என புலம்புவார்கள்.
சமீபத்தில் சிம்பு நடித்து வெளியான படம் செக்க சிவந்த வானம். இந்த படம் நல்ல வெற்றியை கொடுத்த பின்னர் அதற்கான வெற்றி விழாவை கூட நடத்தினார்கள்.இது குறித்து பேசிய சிம்புவின் அப்பாவும் நடிகருமான டி.ஆர். ராஜேந்திரன், நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், பெண் பார்க்க சிம்பு தன்னிடம் டபுள் ஓகே சொல்லிவிட்டதாகவும் பேட்டியின் போது தெரிவித்து உள்ளார்.
எனவே இந்த செய்தி சிம்புவின் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் சிம்புவுக்கு கல்யாணம் தான் என அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.