சொத்தை ஏமாற்றி வாங்கிக்கொண்டார் நடிகர் சரத் பாபு! பிரபல நடிகை பரபரப்பு புகார்!

Published : Feb 05, 2019, 01:36 PM IST
சொத்தை ஏமாற்றி வாங்கிக்கொண்டார் நடிகர் சரத் பாபு! பிரபல நடிகை பரபரப்பு புகார்!

சுருக்கம்

நடிகர் சரத் பாபு தன்னுடைய சொத்துக்களை ஏமாற்றி வாங்கி கொண்டதாக அவருடைய முன்னாள் மனைவியும், நடிகையுமான ரமா பிரபா அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.    

நடிகர் சரத் பாபு தன்னுடைய சொத்துக்களை ஏமாற்றி வாங்கி கொண்டதாக அவருடைய முன்னாள் மனைவியும், நடிகையுமான ரமா பிரபா அவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.  

தமிழில் 1977 ஆம் ஆண்டு 'பட்டின பிரவேசம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சரத் பாபு.  இவர் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்த படமான "முள்ளும் மலரும்" இருவருவருடைய திரைவாழ்விலும்  மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. 

இந்த படத்தை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கதாநாயகனாக பல படங்களில் நடித்தார் சரத் பாபு. அதே போல் ரஜினி, கமல் ஆகியோரோடு இணைந்து பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவர் 1981 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகை ரமா பிரபுவை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமண வாழ்க்கை வெகு நாட்கள் நீடிக்க வில்லை. 1988 ஆம் ஆண்டு, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்நிலையில் தற்போது ரமா பிரபா, நடிகர் சரத் பாபு தன்னை ஏமாற்றி சொத்துக்களை அபகரித்து விட்டதாக புகார் கொடுத்துள்ளார். 

இது குறித்து விளக்கம் கொடுத்துள்ள சரத் பாபு... ரமா பிரபாவிற்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு வீடு இருந்தது. எக்மோர்ரில் இருந்த மற்றொரு வீடு சிக்கலில் இருந்தது. அதை அவர் முதல் கணவரிடம் இருந்து வாங்கினார் என தெரியவந்தது. பிறகு தன்னுடைய விவசாய நிலங்களை விற்று அவருக்கு உமாபதி தெருவில் ஒரு வீடு வாங்கி கொடுத்தேன். அவரின் மற்ற வீடுகளுக்கும் லட்சக்கணக்கில் செலவு செய்து புதுப்பித்தேன். அவருக்கு கொடுத்த என்னுடைய வீட்டை தான் நான் திரும்ப எடுத்து கொண்டேன் என கூறினார். இருப்பினும் இந்த பிரச்சனை இருவருக்குள்ளும் கடும் வாங்குவதை ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!