
தமிழ் திரையுலகில், தனுஷ், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் நடித்து அசத்தி வரும் நடிகர் ரோபோ ஷங்கரின் வீட்டில் அரங்கேறியுள்ள மரண சம்பவத்தால், அவருடைய குடும்பமே தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒரு ஸ்டண்ட் அப் காமெடியனாக சின்னத்திரையில் தன்னுடைய காமெடி பயணத்தை துவங்கி, சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து, தற்போது தன்னுடைய திறமையால் முன்னணி காமெடியனாக வளர்ந்துள்ளார்.
இவரை தொடர்ந்து இவருடைய மனைவி பிரியங்கா, நடன கலைஞர் என்பதை தாண்டி ஸ்டண்ட் அப் காமெடியில் துவங்கி, தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.
மேலும், ரோபோ ஷங்கரின் மகளும் கடந்த வருடம் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் பாண்டியம்மாவாக கால் பந்து களத்தில் இறங்கி அடித்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது. இப்படி ஒட்டுமொத்த குடும்பமே, திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க, நடிகர் ரோபோ ஷங்கர் வீட்டில் அரங்கேறியுள்ள ஒரு துக்க சம்பவம் அவரை மட்டும் இன்றி, அவருடைய ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, பிரியங்காவின் அம்மா, ரோபோ ஷங்கரின் மாமியார் லலிதா உடல்நல பிரச்சனை காரணமாக இன்று அதிகாலை, (11 ஆம் தேதி அன்று ) மரணமடைந்துள்ளார். இதனால் அவருடைய ஒட்டு மொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதை அறிந்த ரோபோ ஷங்கரின் ரசிகர்கள் மற்றும்
நண்பர்கள் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் அவருக்கு தங்களுடைய ஆறுதலை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.