Rajinikanth: அண்ணாத்த ஆட்டம் ஓவர்.... அடுத்த படத்துக்கு தயாரான ரஜினி - இயக்கப்போவது யார் தெரியுமா?

Published : Nov 24, 2021, 02:49 PM ISTUpdated : Nov 24, 2021, 02:51 PM IST
Rajinikanth: அண்ணாத்த ஆட்டம் ஓவர்.... அடுத்த படத்துக்கு தயாரான ரஜினி - இயக்கப்போவது யார் தெரியுமா?

சுருக்கம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கியிருந்த இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. 

தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்தது. நாளை சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் ரிலீசாக உள்ளதால், இன்றுடன் அண்ணாத்த ஆட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினி நடிக்க உள்ள புதிய படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால் அவர் தரப்பில் இருந்து இதுவரை எந்தவித அறிவிப்பு வெளியாக வில்லை.

‘பசங்க’ படம் முதல் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘நம்ம வீட்டு பிள்ளை’ வரை அனைத்தும் வெற்றிப்படங்களாக அமைந்தன. தற்போது சூர்யாவை வைத்து ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தையும் எடுத்து முடித்துள்ளார் பாண்டிராஜ். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி ரிலீசாக உள்ளது. இப்படம் வெளியான பின் இவர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நந்தினிக்காக சுந்தரவள்ளியை பகைத்துக்கொள்ளும் சூர்யா... சவாலில் வெல்லப்போவது யார்? மூன்று முடிச்சு சீரியல்
ரெக்கார்டு பிரேக்கிங் வசூல்... பாலய்யாவின் அகண்டா 2 படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் இத்தனை கோடியா?