
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் இன்று திரைக்கு வெளி வருவதை யொட்டி நள்ளிரவு முதலே திரையரங்கு முன்பு ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பிரம்மாண்டமான தர்பார் திரைப்படம் இன்று உலகமெங்கும் திரையிடப்படுகிறது. அதில் தமிழகம் முழுவதும் 7000 திரையரங்குகளில் திரையிடபடுகிறது.
இன்று திரைக்கு வருவதையொட்டி நள்ளிரவு முதலே ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு கூடி ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் மதுரையில் மட்டும் 27 திரையரங்குகளில் தர்பார் திரைப்படம் திரையிடப்படுகிறது அதன் ஒரு பகுதியாக மதுரை அரசரடி பகுதியில் உள்ள மதி திரையரங்கில் தர்பார் திரைப்படம் திரையிடப்பட்டால் நள்ளிரவு முதல் ரசிகர்களும் ரஜினி மன்ற நிர்வாகிகளும் வாழைமரம், தோரணம் கட்டி அலங்கரித்து வெடி வெடித்து ஆடிப்பாடி கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து பேட்டியளித்த ரஜினி மக்கள் மன்ற மதுரை மாநகர் மாவட்டத் துணைச் செயலாளர் அழகர் கூறுகையில்,எங்கள் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயதிலும் இளமையாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெற்றி அடையும் ரசிகர்கள் நள்ளிரவு முதலே திரையரங்கு முன்பு முன்பு ஆடிப்பாடி கொண்டாடி வருகிறோம்.மேலும் இது குறித்து பேட்டியளித்த ரஜினி ரசிகர் கோல்டன் சரவணன், நான் படையப்பா படத்தில் இருந்து தலைவர் ரஜினிக்காக கோவிலில் அலகு குத்தி மண்சோறு சாப்பிட்டு வருகிறேன் . நேற்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் அழகு குத்தி மண் சோறு சாப்பிட்டோம் என்று கூறினர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.