நடிகை ஸ்ரீதேவி மரணத்தால் விழுப்புரம் கோர சம்பவம் மறக்கப்பட்டதா?  கோபத்தில் கொந்தளித்த நடிகர் !!

 
Published : Feb 27, 2018, 10:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
நடிகை ஸ்ரீதேவி மரணத்தால் விழுப்புரம் கோர சம்பவம் மறக்கப்பட்டதா?  கோபத்தில் கொந்தளித்த நடிகர் !!

சுருக்கம்

Actor prasanna twitter about viluppuram murder

விழுப்புரத்தில் அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று 8 வயது சிறுவனை கொலை செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் குறித்து  அதிகம் ஏன் பேசப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ள நடிகர் பிரசன்னா ,  ஸ்ரீதேவியின் மரணம் அதை மறைத்துவிட்டதா என குறிப்பிட்டுள்ளார்.



விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆராயி  என்பவர்தனது 8 வயது மகன் மற்றும் 14 வயது மகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு மன்பு இறந்து போனார்

அப்போது, அடையாளம் தெரயாத நபர்கள் திடீரென்று வீட்டுக்குள் புகுந்து 3 பேரையும் பயங்கர ஆயுதத்தால் சராமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சிறுவன் சமயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆராயி இந்த தாக்குதலில் படுகாயமடைந்தார்.

அந்த மர்ம கும்பல் 14 வயது மகள் தனத்தை கூட்டாக பாலிய்ல வன்கொடுமை செய்து தப்பிவிட்டது இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார், படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரத்தில் நடந்த இந்த கோரச்செயல் குறித்து நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் டுவீட் ஒன்றை செய்திருந்தார்.



அதில், “விழுப்புரத்தில் ஆராயி மற்றும் அவரின் 8 வயது மகன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் ஒரு பிரபலத்தின் மரணத்தால் மட்டுமே அதிகம் பேசப்படாமல் இருக்கிறதா அல்லது வேறு காரணமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் கேரளாவில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மதுவை கொன்ற கும்பல் கைது செய்ததைப் போல் இங்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்றும் பிரசன்னா குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!