பவன் கல்யாண் பிறந்த நாள் கொண்டாட்டம்: ஒரே நாளில் 8 ரசிகர்கள் உயிரிழப்பு...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Sep 03, 2020, 07:41 PM IST
பவன் கல்யாண் பிறந்த நாள் கொண்டாட்டம்: ஒரே நாளில் 8 ரசிகர்கள்   உயிரிழப்பு...!

சுருக்கம்

இதனால் மின்சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தெலுங்கு திரையுலகின் டாப் ஸ்டாரும்,  ஜன சேனா என்ற கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நேற்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினர். தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டாரான இவரது பிறந்த நாளை முன்னிட்டு,  ஊர் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், தோரணம் என பவன் கல்யாண் பிறந்தநாளை ரசிகர்கள் மாஸாக கொண்டாடி வந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் சாந்திபுரம் பகுதியில் பவன் கல்யாண் ரசிகர்கள் 6 பேர் பேனர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

இரும்பு சட்டங்களில் பொருத்தப்பட்ட பிளக்ஸ் பேனரை சாலையோரம் வைக்க முயன்ற போது, அது மின்கம்பியில் மோதியுள்ளது. இதனால் மின்சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

இந்த செய்தியைக் கேள்விப்பட்ட பவன் கல்யாணம் ரசிகர்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதோடு, உயிரிழந்த ரசிகர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் ஜன சேனா கட்சி சார்பில் அறிவித்தார்.  இதேபோல் பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் “பிங்க்” படத்தில் தெலுங்கு ரீமேக்கான வக்கீல் சாப் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளார். தெலுங்கு திரையுலகின் முன்னணி ஸ்டார்களான ராம் சரண், அல்லு அர்ஜுன் ஆகியோரும் நிதி உதவியை அறிவித்தனர். 

 

இதையும் படிங்க: ஜனவரியில் மூன்றாவது குழந்தை... நடிகர் தனுஷ் வீட்டில் விரைவில் விசேஷம்...!

இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் தெலங்கானா மாநிலம் வரங்கல் மாவட்டத்தில் உள்ள போச்சம் பகுதியில் 5 பேர் பவன் கல்யாண் பிறந்த நாள் கொண்டாடத்தில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த போது அவர்களுடைய கார், எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. அந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். பவன் கல்யாண் பிறந்தநாளின் போது 8 ரசிகர்கள் உயிரிழந்தது டோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!