கர்நாடகா முதல்வராகிறார் ஆக்ஷ்ன் கிங் அர்ஜீன்…

 
Published : May 12, 2017, 11:57 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
கர்நாடகா முதல்வராகிறார் ஆக்ஷ்ன் கிங் அர்ஜீன்…

சுருக்கம்

Actor King Arjun becomes Karnataka Chief Minister

கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்க இருக்கிறார்.

கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் மகனுமாகிய குமாரசாமி, ஏற்கனவே திரைப்படத் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் திரையுலகில் பங்கு பெற்றவர்.

தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வரும் அவருடைய வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளது.

இந்தத் திரைப்படத்திற்கு ’பூமி புத்ரா’ என பெயரிடப்பட்டுள்ளது.

“பூமி புத்ரா” என்ற பெயரை வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் பதிவு செய்து வைத்திருந்தது. ஆனால், அந்த பெயரை முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு சொந்தமான சென்னாம்பிகா தயாரிப்பு நிறுவனம் தற்போது வாங்கியுள்ளது.

அதாவது தனது வாழ்க்கை வரலாற்றை தானே தயாரிக்க உள்ளார் குமாரசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில்தான் முன்னாள் முதல்வர் குமாரசாமி கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.நாராயணன் இந்த படத்தை இயக்குகிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனநாயகன் vs பராசக்தி : நன்றி மறந்தாரா சிவகார்த்திகேயன்..? சினிமாவிலும் விஜய்க்கு எதிராக நடக்கும் பாலிடிக்ஸ்
2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி