
தமிழ் சினிமாவில் எதார்தமான காமெடியனாக எல்லோராலும் அறியப்பட்டவர் நடிகர் கருணாகரன். காமெடி நடிகராக அறிமுகமாகி இருந்தாலும் சமீப காலமாக குணசித்திர வேடங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் இவர் இந்த வருடம் மட்டும் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65வது பொதுக்குழு கூட்டம் கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இதையொட்டி சென்னையில் நடைபெற இருந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது.
மேலும் பொதுக்குழு கூட்டம் துவங்குவதற்கு முன் மறைந்த முன்னால் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால் முன்னால் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தப்படவில்லை. இதனை விமர்சிக்கும் விதமாக நடிகர் எஸ்.வி.சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்... "இன்று நடைபெற்ற நடிகர் சங்க சுய தம்பட்ட பொதுக்கூட்டத்தில் (பொதுக்குழு)மறைந்த பல கலைஞர்களுக்கு, முன்னாள் முதல்வருக்கு, அஞ்சலி செலுத்தியவர்களுக்கு, நாடே 7 நாள் துக்கம் அனுசரிக்கும் வாஜ்பாய் அவர்களுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தத்தெரியவில்லை. இது அறியாமையா ⁉ அகந்தையா ⁉ " என நடிகர் சங்க செயல்பாடுகள் குறித்து விமர்சித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில்... முதலமைச்சர் கிரிஜா மேடம் அவர்களை மதிப்பதாக கூறி எஸ்.வி.சேகருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் கருணாகரன். இவரின் இந்த பதிலடிக்கு நெட்டிசங்கள் பலர் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.