
கன்னட திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர் கார்த்திக் விக்ரம் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட செய்தி ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை இரவு 11 மணியளவில் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்க்கு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
இவர் பெங்களூரு சாலையில் வந்துக்கொண்டிருந்தபோது 5 திற்க்கும் மேற்ப்பட்டவர்கள் கும்பலாக இவருடைய காரை சுற்றி வளைத்ததாகவும். இவர் தன்னுடைய காரை நிறுத்தியதும் மர்ம நபர்கள் இவரை தாக்கி விட்டு காரில் இருந்த விலை உயர்ந்த செல் போன் மற்றும் பணத்தை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
மர்ம நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த நடிகர் கார்த்திக் விக்ரமை அருகே இருந்தவர்கள் மீட்டு பெங்களூரு அருகே உள்ள மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டது. மேலும் இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் காது மற்றும் தலையில் அவருக்கு பலமான காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.