
நுரையீரல் பிரச்சனை காரணமாக பிரபல நடிகரும், கிரிமினல் வழக்கறிஞருமான, நடிகர் துரை பாண்டியன் மரணமடைந்துள்ளது ரசிகர்களையும், திரையுலகை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழில், நடிகர் விக்ரம் நடித்த ஜெமினி, சூர்யா நடித்த மௌனம் பேசியதே, உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து, பிரபலமானவர் துரை பாண்டியன். இவர் ஒரு வழக்கறிஞராக இருந்தாலும், சிறு வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்த காரணத்தால் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களாகவே நுரையீரல் பிரச்சனை காரணமாக, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவர்கள் உயர் தர சிகிச்சை கொடுத்ததும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் இவருடைய குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
துரை பாண்டியன் அதிமுக வழக்கறிஞர் பிரிவிலும் உயரிய பொறுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் துரை பாண்டியனுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இவருடைய மறைவுக்கு பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.