கமலின் ஆஸ்தான வசனகர்த்தா, நடிகர் கிரேஸி மோகன் திடீர் மாரடைப்பால் மரணம்...

By Muthurama LingamFirst Published Jun 10, 2019, 1:37 PM IST
Highlights

கமல்ஹாசனின் ‘சதி லீலாவதி’ முதல் ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ வரை பல படங்களுக்கு வசனம் எழுதியவரும், நகைச்சுவை நாடக இயக்குநரும், நடிகருமான கிரேஸி மோகன் சற்று முன்னர் திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார், அவருக்கு வயது 67.
 
மோகன் ரங்காச்சாரி என்ற இயற்பெயர் கொண்ட கிரேஸி மோகன் அடிப்படையில் மெக்கானிக் எஞ்சினியரிங் படித்தவர். கல்லூரிக் காலங்களில் ஸ்கிட் எனப்படும் குட்டி குட்டி நாடகங்களைப் போட்டவருக்கு நல்ல வேலை கிடைத்தும் அதில் மனம் லயிக்காமல் சபாக்களில் நாடகங்கள் போட ஆரம்பித்தார். சுமார் 3000க்கும் மேற்பட்ட நாடகங்களை நிகழ்த்தியிருக்கும் கிரேஸி மோகனை முதன் முதலில் தனது ‘பொய்க்கால் குதிரைகள்’படத்துக்கு வசனம் எழுத வைத்தவர் இயக்குநர் பாலசந்தர்.

பின்னர் கமலுடன் ‘சதி லீலாவதி’ படத்தில் வசனகர்த்தாவாகப் பணியாற்ற ஆரம்பித்த கிரேஸி மோகன் அடுத்து அவருடன் தொடர்ந்து ’காதலா காதலா’, ‘மைக்கேல் மதன காமராஜன்’,’அபூர்வ சகோதர்கள்’,’இந்தியன்’,’அவ்வை சண்முகி’,’தெனாலி’,’பஞ்ச தந்திரம்’ உட்பட பல படங்களில் பணியாற்றினார். வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அதே சமயம் சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் தோன்றி தனது டைமிங் காமெடியால் மக்களை சிரிக்கவைத்தவர் கிரேஸி மோகன்.

click me!