
தமிழ், தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் நடித்தவர் பப்லு பிரித்திவிராஜ். வானமே எல்லை, அவள் வருவாளா ஆகிய படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் ரமணி விசஸ் ரமணி, மர்ம தேசம், அரசி, வாணி ராணி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடன் விமானத்தில் பயணித்த சக பயணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த ஏர் ஏசியா விமானத்தில் நடிகர் பப்லுவுடன், கொல்கத்தாவைச் சேர்ந்த அபய்குமார் சிங் என்பவர் பயணித்துள்ளார். விமானம் சென்னை வந்தடைந்த போது பெட்டியை எடுப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. விமானத்திற்குள் நடந்த மோதலை அடுத்து விமான நிலையத்திற்குள்ளும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதனை தடுக்க வந்த விமான நிலைய பாதுகாப்பு போலீசாரிடமும் இருவரும் மாறி, மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதையடுத்து இருவரையும் பேசி சமாதானப்படுத்தி போலீசார் அனுப்பிவைத்தனர். இதனால் சிறிது நேரத்திற்கு விமான நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.