
பில்லா 2, சூது கவ்வும் ஆகிய படங்களில் குணச்சித்திர நாயகனாக அறிமுகம் கொடுத்தவர் நடிகர் அசோக் செல்வன், இந்த படத்தை தொடர்ந்து தெகிடி, வில்லா,144 ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார்.
இதை தொடர்ந்து தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தை தேர்தெடுத்து நடித்துவருகிறார்.
இந்நிலையில் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கதில் அசோக் செல்வன் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு பாண்டிச்சேரி சென்றுள்ளனர். அங்கு கடலுக்குள் நடக்கும் ஒரு சண்டை காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
அந்த காட்சியில் அசோக் செல்வன் தண்ணீருக்குள் குதிப்பது போல் இயக்குனர் எடுத்துள்ளார். இந்த காட்சிகாக கடலுக்குள் குதித்த அவர் நிறைய தண்ணீரை குடிக்க பெறும் பிரச்சனையாகியுள்ளது. அதே நேரத்தில் பக்கத்திலேயே இருந்த ஒரு படகு அவரை தாக்க வர, சட்டென்று அவர் இன்னும் தண்ணீரின் ஆழத்தில் சென்றிருக்கிறார்.
அங்கு என்ன நிலை என்பதை அறிந்த மீனவர்கள் சிலர் உடனே அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். அவர்கள் கொடுத்த முதலுதவி சிகிச்சைக்கு பின் அசோக் செல்வனை மருத்துவமனைக்கு படக்குழுவினர் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.