’பரணிலிருந்து சரிந்து விழுந்த நடிகை வசுந்தராவை கேட்ச் பிடித்துக் காப்பாற்றினேன்’...நடிகர் அப்புக்குட்டி திக் திக் அனுபவம்...

Published : Sep 03, 2019, 05:01 PM IST
’பரணிலிருந்து சரிந்து விழுந்த நடிகை வசுந்தராவை கேட்ச் பிடித்துக் காப்பாற்றினேன்’...நடிகர் அப்புக்குட்டி திக் திக் அனுபவம்...

சுருக்கம்

‘வாழ்க விவசாயி ‘படம் என்னை வாழ வைக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும்’என்கிறார் அப்புக்குட்டி.

‘வாழ்க விவசாயி ‘படம் என்னை வாழ வைக்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.இந்தப் படம் விவசாயிகளை திரும்பிப்பார்க்க வைக்கும் படம் என்று சொல்வதைவிட எல்லா மக்களையும் விவசாயிகள் பக்கம் திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு படமாக இருக்கும்’என்கிறார் அப்புக்குட்டி.

வெண்னிலா கபடிக்குழு படத்தில் முக்கிய கேரக்டரில் அடுத்து ‘அழகர்சாமியின் குதிரை’மூலம் நாயகன் அந்தஸ்துக்கு உயர்ந்த அப்புக்குட்டி அடுத்து  ஏனோ அவ்வளவாக சோபிக்கவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப்பின் நாயகனாக நடிக்கும் ‘வாழ்க விவசாயி’படம் குறித்து மிக நம்பிக்கையுடன் பேசுகிறார் அப்புக்குட்டி.

“எனக்கு ‘அழகர்சாமியின் குதிரை’ படம் பரவலான பாராட்டுகளையும் புகழையும் தேடித் தந்தது. அதற்குப் பிறகு தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற தெளிவையும் கொடுத்தது. நல்ல கதையம்சம் கொண்ட படத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.இது மாதிரி கதையில் நான் நடிக்க வேண்டும் என்று நான் விரும்பிய ஒரு கதையாக ‘வாழ்க விவசாயி ‘கதை அமைந்திருக்கிறது. அந்த கதையைச் சொன்னபோதே இதில் நாம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த கதை. நான் ஆசைப்பட்டு விரும்பி நடித்த கதை.

இயக்குநர் பி.எல்.பொன்னிமோகன் சொன்ன கதை மட்டும் பிடித்து இருந்தால் போதுமா? இதை தயாரிக்க நல்ல தயாரிப்பாளர் வேண்டுமே.அப்படி ஒரு நல்ல தயாரிப்பாளராக பால் டிப்போ கதிரேசன் கிடைத்தார். படத்தின் மீது எனக்கு நம்பிக்கை வரும்படி விரைவாகவே எனக்கு முன் பணம் கொடுத்தார். படம் தொடங்கப் பட்டது. இயக்குநர் மோகன் சொன்னபடியே கதையை அழகாகப் படமாக்கியிருக்கிறார்.

ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்களுடன் நாமும் வாழ்ந்த உணர்வைப் படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். நானும் ஒரு விவசாயின் மகன். எனக்கும் விவசாயம் தெரியும். நாற்று நடுவது ,களை எடுப்பது, கதிர் அடிப்பது , அறுவடை செய்வது வரை எனக்கும் எல்லா வேலைகளும் தெரியும் .எனவே இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் சுலபமாகவும் மகிழ்ச்சியாக இருந்தது .

“கதையைக் கேட்டவுடன் படமெடுப்பது என்று முடிவானது .உடன் எனக்குள் அடுத்த கேள்வி வந்தது .யார் கதாநாயகி ?அவர் எப்படி இருப்பார்? என்பது தான் அது .ஏனென்றால் என் உயரத்துக்கு அவர்களும் சரியாக இருக்க வேண்டுமே என்கிற கவலை எனக்கு. நாயகி வசுந்தரா என்றார்கள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது . அவர் என்னை விட உயரமாக இருப்பாரே. என்னைவிட நிறமாக இருப்பாரே என்று மீண்டும் கவலை.அவர் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தில் நடித்தது எனக்குப் பிடித்திருந்தது ‘பேராண்மை’யிலும் நன்றாக நடித்திருந்தார்.

ஆனால் அவரைப் பற்றி நான் கவலைப்பட்டது பயந்தது எல்லாமே படப்பிடிப்பில் மாறிவிட்டது. அவர் உயரம் தெரியாத படியும் நிறம் தெரியாத படியும் சரி செய்து மாற்றங்கள் செய்து மேக்கப்பில் நிறத்தைக் குறைத்து எனக்கு ஜோடியாக நடிக்க வைத்துவிட்டார்கள்.வசுந்தரா ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகை .அவர் வழக்கமான கதாநாயகி கிடையாது. அவருக்கும் இந்தப் படம் நல்ல பெயரைத் தேடித் தரும். தன்னால் முடிந்த உழைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டியிருக்கிறார்.ஒரு நாள் ஒரு பரணில் கதாநாயகன் கதாநாயகி நாங்கள் இருவரும் ஏறி அமர்ந்து பேசிக்கொண்டு கொண்டிருப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.ஆர்ட்டைரக்டர் அந்தப் பரணை நன்றாகத்தான் தயார் செய்து இருப்பதாக கூறினார். முதல் நாள் நல்ல மழை பெய்திருந்தது . பாண் நனைந்து ஈரம் சொட்டச் சொட்ட இருந்தது. முதலில் அதில் நான் ஏறினேன் .அடுத்து வசுந்தரா ஏறிய போது அந்தப் பரண் சரிந்து விழுந்தது. நான் விழுந்து என் மேல் அவர் விழுந்தார். என் மேல் அவர் விழுந்ததைப் பார்த்து எனக்கு பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது.ஆபத்துக்கு பாவம் இல்லை என்று அவரை நான் பிடித்துக்கொண்டேன் . தவறாக நினைத்துக் கொள்வாரோ என்று பயந்தேன்.ஆனால் நீங்கள் “நல்ல வேளை என்னை காப்பாற்றி விட்டீர்கள். நான் உங்கள் மேல் விழுந்திருக்காவிட்டால் எனக்கு இந்நேரம் அதிகமாக அடிபட்டிருக்கும்” என்றார். எனக்கு அப்பாடா என்றிருந்தது. என்று தனது நாயகியையும் விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார் அப்புக்குட்டி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!