நடிகர் ஆனந்தராஜ் ரஜினியுடன் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன...?

Asianet News Tamil  
Published : May 27, 2017, 02:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
நடிகர் ஆனந்தராஜ் ரஜினியுடன் திடீர் சந்திப்பு... பின்னணி என்ன...?

சுருக்கம்

actor annadharaj meet rajinikanth

அரசியல் சூழல் குறித்து அவ்வப்போது காரம் சாரமான கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் ஆனந்த ராஜ் தற்போது தீடீர் என ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியுள்ளார்.

சமீபத்தில் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து புகை படம் எடுத்துக்கொண்டபோது, ரசிகர்களிடம் பேசுகையில், சிஸ்டம் சரி இல்லை என்றும், நாடு கெட்டுபோய் கிடக்கிறது என்றும்  தெரிவித்தார்.
மேலும் நான் அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன் தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

அதே போல ரசிகர்களை பார்த்து, போருக்கு தயாராகுங்கள் என தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து சூசகமாக தெரிவித்தார். 

இந்நிலையில், அதிமுகவை விட்டு விலகிய நடிகர் ஆனந்தராஜ் இன்று ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்... சுமார் அரைமணிநேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த சந்திப்பில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

18 லட்சத்தோடு பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய பிரபலம்... அவசரப்பட்டுட்டியே தலைவா என குமுறும் ரசிகர்கள்
தலைகீழாக மாறிய டாப் 10 சீரியல் டிஆர்பி ரேட்டிங்... சன் டிவிக்கு சம்மட்டி அடி கொடுத்த விஜய் டிவி..!