முன்னணி நடிகரிடம் பணிபுரிபவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..! அம்மாவிற்கும் டெஸ்ட்... அவரே வெளியிட்ட தகவல்..!

By manimegalai aFirst Published Jun 30, 2020, 2:02 PM IST
Highlights

உலகையே குலுக்கி வரும், கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில மாதங்களாக மிகவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் தமிழகத்திலும் 86 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார். 
 

உலகையே குலுக்கி வரும், கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில மாதங்களாக மிகவும் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்தியாவில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் தமிழகத்திலும் 86 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார். 

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து, அவர்களை குணப்படுத்தி வரும் நிலையிலும்... கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பணிகளையும், மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

பணக்காரர், ஏழை என எந்த வித பாகுபாடும் இன்றி, பரவி வரும் கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளும் ஒரே வழி, முடிந்தவரை வீட்டில் இருந்து வெளியே வராமல் பாதுகாப்பாக இருப்பது தான். ஆனால் சில சமயங்களில் அத்தியாவசிய விஷயங்களுக்காக வெளியே சென்றால், கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்பதையும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத பட்சத்தில், அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் அமீர் கான் தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, தன்னுடைய அலுவலகத்தில் பணியாற்றும் சிலருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உடனடியாக  தனிமைப்படுத்தப்பட்டு மும்பை சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்தில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன, இந்த விஷயத்தில் மும்பை சுகாதாரத்துறைக்கு நான் மிகவும் நன்றி செலுத்த கடமைப்பட்டுள்ளேன். கொரோனாவால் பாதிக்கப்பட்ட என்னுடைய ஊழியர்களை அவர்கள் மிகவும் கவனத்துடன் கவனித்து வருகின்றனர் என மும்பை சுகாராத துறையினரை பாராட்டியுள்ளார்.

மேலும் என்னுடைய அலுவலக ஊழியர்களில் ஒரு சிலரை தவிர மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் நெகட்டிவ் என்ற ரிசல்ட் வந்துள்ளதாகவும், மேலும் கூடுதல் பாதுகாப்புடன் செயல்படும் விதத்தில், தன்னுடைய அம்மாவிற்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்றும் இதன் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பை சுகாதாரத்துறை, மும்பை கார்ப்பரேஷன் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் எனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அமீர்கான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

click me!