
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உள்ள நலிவுற்ற கலைஞர்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக, கஷ்டப்பட்டு வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் நோக்கத்தில், செய்தி விளம்பரத்துறை அமைச்சருக்கு நடிகரும் முன்னாள் நடிகர் சங்க தலைவருமான நாசர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் திரைப்படத்தில் நடிக்கும் துணை நடிகர் - நடிகையர்கள் சுமார் 1500 உறுப்பினர்களும், மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள நாடக கலைஞர்கள் சுமார் 2000 திற்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது. இதனால் திரைப்பட படப்பிடிப்புகளும் அன்றாடம் ஊதியம் பெறும் திரைப்பட மற்றும் நாடகம் ஆகிய துறைகளில் உள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நலிந்த கலைஞர்கள் உட்பட அனைவரும் தங்கள் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் இதனை கருத்தில் கொண்டு, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் திரைப்படத்துறை நலவாரியம் மூலம் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இக்கால கட்டத்தில் தாங்கள் செய்யும் பேருதவி எங்கள் மனதில் நீங்காத இடம் பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் நாசர் செய்தி விளம்பரத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.