பரவை முனியம்மாவை நேரில் சந்தித்த ’அட்டகத்தி’ ஹீரோ... மருத்துவ செலவை தான் ஏற்பதாக உறுதி...!

Published : Oct 31, 2019, 12:36 PM ISTUpdated : Oct 31, 2019, 12:39 PM IST
பரவை முனியம்மாவை நேரில் சந்தித்த ’அட்டகத்தி’ ஹீரோ... மருத்துவ செலவை தான் ஏற்பதாக உறுதி...!

சுருக்கம்

பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ள அபி சரவணன், தீபாவளியை முன்னிட்டு, பரவை முனியம்மாள் குடும்பத்தினருக்காக புது டிரெஸ், ஸ்வீட், பழங்கள் எல்லாம் வாங்கி கொடுத்த அபி சரவணன், 8 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். 

பரவை முனியம்மாவை நேரில் சந்தித்த ’அட்டகத்தி’ ஹீரோ... மருத்துவ செலவை தான் ஏற்பதாக உறுதி...!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள பரவை பகுதியைச் சேர்ந்தவர் பரவை முனியம்மா, நாட்டுப்புற பாடகியான இவர் ‘தூள்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பாடிய ‘சிங்கம் போல’ பாடல் பட்டி தொட்டி எல்லாம் தூள் கிளப்பியது. அதன் பிறகு சினிமாவில் பிஸியான பரவை முனியம்மா, இறுதியாக சிவகார்த்திகேயுடன் ‘மான் கராத்தே’ படத்தில் நடித்தார். 2014ம் ஆண்டில் இருந்தே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த பரவை முனியம்மா, சினிமாவில் நடிக்க முடியாத அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையானார். எனவே அவரது வாழ்வாதாரத்திற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் படி 6 லட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக வழங்கப்பட்டது. அதன் மூலம் மாதம் 6 ஆயிரம் ரூபாய் அவரது குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.

படுத்த படுக்கையாக உள்ள பரவை முனியம்மாவின் நிலையை கேள்விப்பட்ட சிவகார்த்திகேயன், அவரை நேரில் சந்தித்து 30 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதன் பின்னர் யாருமே பரவை முனியம்மாவை கண்டுகொண்டதாக தெரியவில்லை. இந்நிலையில் ‘அட்டகத்தி’ படத்தில் செகண்ட ஹீரோவாக நடித்தவர் அபி சரவணன், இவர் பட்டதாரி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். ‘பட்டதாரி’ படத்தில் நடித்த அதிதி மேனன் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றி விட்டதாக பரபரப்பு கிளம்பினார். தற்போது பரவை முனியம்மாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு, பரவை முனியம்மாள் குடும்பத்தினருக்காக புது டிரெஸ், ஸ்வீட், பழங்கள் எல்லாம் வாங்கி கொடுத்த அபி சரவணன், 8 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். 

அபி சரவணனின் உதவியால் நெகிழ்ந்து போன பரவை முனியம்மா ”80 படங்களுக்கு மேல நடிச்சிருக்கேன், ஆனால் சிவகார்த்திகேயன் தம்பிக்கு அப்புறம் நீ மட்டும் தான் என்ன வந்து பார்த்திருக்க, யாருமே என்ன பார்க்க வரலை” என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். பரவை முனியம்மாவிற்கு ஆறுதல் கூறிய அபி சரவணன், ”உங்களது மருத்துவ செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என உறுதியளித்து விட்டு திரும்பியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?