’சென்சார் போர்டு அதிகார்கள் லஞ்சம் வாங்குகிறார்கள்’...விழா மேடையில் மானத்தை வாங்கிய பிரபல தயாரிப்பாளர்...

By Muthurama LingamFirst Published Sep 14, 2019, 10:36 AM IST
Highlights

’படப்பிடிப்பு நடக்கும்போது நடுவில் ஒரு நாய் குறுக்கே சென்றுவிட்டால் கூட அது சென்சாரில் பெரும் பிரச்சினை ஆகிவிடுகிறது. அனிமல் வெல்ஃபேர் போர்டில் அநியாயத்துக்கு லஞ்சம் வாங்குகிறார்கள் ’என்று ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் சென்சார் போர்டின் மானத்தை வாங்கினார் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன்.
 

’படப்பிடிப்பு நடக்கும்போது நடுவில் ஒரு நாய் குறுக்கே சென்றுவிட்டால் கூட அது சென்சாரில் பெரும் பிரச்சினை ஆகிவிடுகிறது. அனிமல் வெல்ஃபேர் போர்டில் அநியாயத்துக்கு லஞ்சம் வாங்குகிறார்கள் ’என்று ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவில் சென்சார் போர்டின் மானத்தை வாங்கினார் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன்.

ஜெமினி சினிமாஸ் ஜெமினி  ராகவா மற்றும் ஜெம்ஸ்  பிக்சர்ஸ்  முருகானந்தம்  இணைந்து தயாரித்துள்ள  படம் ’ஆண்கள் ஜாக்கிரதை’.நூற்றுக்கணக்கான முதலைகள் இடம்பெற்றுள்ள இப்படத்தை  கே.எஸ்.முத்து மனோகரன் இயக்கியுள்ளார்.  இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா  நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

அவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “ஆண்கள் ஜாக்கிரதை. எப்போதுமே ஆண்கள் ஜாக்கிரதையாகத் தான் இருக்கணும். ஏன்னா இப்போ மீடூ என்ற விசயம் வந்த பின் ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை.எல்லாரும் முதல் போட்டு படமெடுப்பார்கள். இந்தத் தயாரிப்பாளர் முதலைகளைப் போட்டு படமெடுத்துள்ளார். இப்போது நடிகர்களை வைத்து படமெடுப்பதே கஷ்டம். இவர்கள் முதலையை வைத்து சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.

ட்ரைலரே நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக நல்லாருக்கும். குறிப்பாக இசை நன்றாக இருந்தது. அதனால் இது வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. சூட்டிங்கில் இடையில் நாய் வந்தால் கூட இப்போது சென்சாரில் பிரச்சனை வருகிறது. மோடி அரசு நல்லா போகுறதா சொல்றாங்க. ஆனால் அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு சென்சாரில் லஞ்சம் இருக்கு. போனமாசம் கூட ஒரு படத்திற்கு மூன்று லட்சம் வாங்கினார்கள். அனிமல் வெல்ஃபேர் பிரச்சனையை சரி செய்வது படம் எடுப்பதை விட கஷ்டமாக இருக்கிறது.ஆன்லைன் டிக்கெட் விசயத்தை நிர்மலா சீத்தாராமன் சரி செய்கிறேன் என்று சொன்னார். அதை இப்போது நமது அரசும் செய்துள்ளது. அந்த ஆன்லைன் மூலமாக வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும். இயக்குநர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களை மனதில் வைத்து படமெடுக்க வேண்டும். ஒரு ஹீரோவை வைத்து  படமெடுத்தால் எவ்வளவு வியாபாரமாகும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

click me!