கோர்ட் உத்தரவை மீறி ‘தலைவி’படப்பிடிப்பைத் துவங்கிய இயக்குநர் ஏ.எ.விஜய்...

By Muthurama LingamFirst Published Nov 11, 2019, 10:57 AM IST
Highlights

இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் ‘தலைவி’ படத்தையும், இணையதளத் தொடரையும் தயாரிக்கத் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு, நவம்பர் 5 ஆம் தேதி நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தனக்குத் தெரியும் என்றும், படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தையும் சேர்க்க வாய்ப்புள்ளதால், தன்னுடைய அனுமதி இல்லாமல் படங்கள் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தீபா தரப்பில் வாதிடப்பட்டது.

‘ஜெயலலிதாவின் குடும்ப வாரிசுகளான எங்கள் அனுமதி இல்லாமல் அவரது வாழ்க்கை வரலாற்றுப் படங்களை எடுக்கக் கூடாது’என்று அவரது அண்ணன் மகள் ஜெ’தீபா வழக்குத் தொடர்ந்திருக்கும் நிலையில், அதை சற்றும் பொருட்படுத்தாமல் நேற்று தனது ‘தலைவி’படப்பிடிப்பை பூஜையுடன் துவங்கினார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.

கடந்த ஓராண்டாகவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் தொடர்பாக புதுப்புது அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. அவர்களில் இயக்குநர் கவுதம் மேனன் ஒரு வெப் சீரியலாக இயக்கி முடித்திருக்க, இயக்குநர் ஏ.எல்.விஜயோ விரைவில் படப்பிடிப்பைத் துவங்கும் முனைப்பில் இருந்தார்

இந்நிலையில், தன்னுடைய அனுமதியில்லாமல் ‘தலைவி’ படத்தையும், இணையதளத் தொடரையும் தயாரிக்கத் தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கு, நவம்பர் 5 ஆம் தேதி நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் தனக்குத் தெரியும் என்றும், படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தையும் சேர்க்க வாய்ப்புள்ளதால், தன்னுடைய அனுமதி இல்லாமல் படங்கள் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் தீபா தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், இந்தக் கதையில் தங்களது குடும்ப அந்தரங்கத்தைப் பாதிக்கும் வகையில் காட்சிகள் சித்தரிக்கப்படலாம் என்று அச்சம் தெரிவித்த தீபா தரப்பு, ஜெயலலிதாவின் கண்ணியத்திற்குப் பாதிப்பில்லாமல் இத்திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.அந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, இது தொடர்பாக நவம்பர் 14 ஆம் தேதிக்குள் பதிலளிக்க இயக்குநர்கள் விஜய் மற்றும் கௌதம் மேனன் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

கோர்ட்டின் அந்த உத்தரவு குறித்து இயக்குநர் கவுதம் மேனன் மவுனம் சாதித்துக்கொண்டிருக்க, ஏ.எல்.விஜயோ நேற்று நவம்பர் 10 தேதியன்று தனது ‘தலைவி’படத்துக்கு பூஜையே போட்டுவிட்டார்.

click me!