முன்பதிவில் ரூ.3 கோடி வசூல் – சாதனையில் மூழ்கிய ‘சர்க்கார்’

Published : Nov 05, 2018, 12:33 PM IST
முன்பதிவில் ரூ.3 கோடி வசூல் – சாதனையில் மூழ்கிய ‘சர்க்கார்’

சுருக்கம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் நானை வெளியாக உள்ள சர்க்கார் திரைப்படம், முன்பதிவில் மட்டும் ரூ.3 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், 402 தியேட்டர்கள், 1700 காட்சிகள் என கேரளாவில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் நானை வெளியாக உள்ள சர்க்கார் திரைப்படம், முன்பதிவில் மட்டும் ரூ.3 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், 402 தியேட்டர்கள், 1700 காட்சிகள் என கேரளாவில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. இப்படம் தீபாவளி வெளியீடாக நாளை வெளியாகிறது.

தமிழக திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே முடிந்தது.

ஆனால், கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளனர். அவரது பல படங்கள் கேரளாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களை கடந்து வசூல் செய்துள்ளது.

இதையொட்டி, ’சர்கார்’ படத்துக்காக விஜய்க்கு, 175 அடி உயர கட்-அவுட் வைத்து ஆச்சர்யப்படுத்தினார்கள் கேரள ரசிகர்கள். இந்நிலையில், பட வெளியீட்டுக்கு முன்பே டிக்கெட் விற்பனையில் பெரும் சாதனை நிகழ்த்தியிருக்கிறது ‘சர்கார்’.

சுமார் 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகவுள்ள இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு வசூல் மட்டும் ரூ.3 கோடியை தாண்டிவிட்டது. பல்வேறு திரையரங்குகளில் அதிகாலை ரசிகர்கள் காட்சிகளாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

முதல் நாளில் 402 தியேட்டர்களின் 1700 காட்சிகள் திரையிடப்படுகிறது. அதில் 300 காட்சிகள் ரசிகர்களுக்காகவும், 25 காட்சிகள் பெண் ரசிகர்களுக்காகம், 51 திரையரங்குகளில் 24 மணி நேரம் மூவி மாரத்தனாகவும் ‘சர்கார்’ திரையிட உள்ளது.

இந்த செய்தியை, ‘சர்கார்’ படத்தை கேரளாவில் வெளியிடும் இஃபார் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Samyuktha Menon : அடேங்கப்பா! சேலையில் இப்படி அழகு காட்ட முடியுமா? நடிகை சம்யுக்தா மேனன் ஸ்டில்ஸ்!!
Sonia Agarwal : சோனியா அகர்வாலா இது? 43 வயசு மாதிரியே தெரில! ஆளை மயக்கும் அழகில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்