2.0 டிக்கெட் விலை ரூ.999...! இப்பவே புக் பண்ணலாம்...! அட..எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாமாம்...!

 
Published : Nov 27, 2017, 05:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
2.0 டிக்கெட் விலை ரூ.999...! இப்பவே புக் பண்ணலாம்...! அட..எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாமாம்...!

சுருக்கம்

2.0 online ticket cost is rs999

உலக அளவில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நடிகர் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம் 2.0 விரைவில் திரைக்கு வர உள்ளது

ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டு உள்ள 2.0  படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் துபாயில் நடைபெற்றது.மிக பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த விழாவில் மிக முக்கிய நட்சத்திரங்கள் பங்குபெற்றனர்

இசை வெளியீட்டு விழாவே உலக அளவில் மிகவும் பிரபலமடைந்தது.ரூ.450 கோடி பட்ஜெட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில்2.0 திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளிவர உள்ளது  

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து உள்ளார். 2.0 தமிழ்,தெலுங்கு,இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகிறது.

ஆன்லைன் டிக்கெட் ரூ.999

2.0 படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கிவிட்டது என்பதால், தனது  வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் சலுகையை அறிவித்து உள்ளது.அதன் படி அமேசானின் பிரைம் வீடியோ சேவையில் உறுப்பினராக உள்ளவர்கள் 2.0 படத்தை மூன்று மொழிகளிலும் பார்க்கலாம் என தெரிவித்து உள்ளது.மேலும் ஆன்லைன் டிக்கெட்டில்  ரூ.999 செலுத்தி  பெறப்படும் டிக்கெட் மூலம், எத்தனை முறை வேண்டுமானாலும் படத்தை பார்க்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது அமேசான்

மாபெரும் எதிர்பார்ப்பை கிளப்பி,வரும் ஜனவரியில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ள 2.0 படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

9-ல் 8 படங்கள் தோல்வி.. பான் இந்தியா ஸ்டார் தான் கடைசி நம்பிக்கை!
அபிராமிக்கு பதில் சாமுண்டீஸ்வரி செத்திருக்கலாம்! கதறி அழுத ரசிகர்கள் - சீரியல் குழுவை காரித் துப்பும் நெட்டிசன்கள்!