
வட இந்திய ஊடகங்கள் உட்பட மொத்த இந்தியாவும் பரபரப்புடன் எதிர்பார்த்திருந்த ‘2.0’ பட ட்ரெயிலர் சற்று முன்னர் நடந்துமுடிந்தது. வட இந்திய ஊடகங்கள் அதிகம் வந்திருந்ததால் முதலில் ஆங்கிலத்தில் சுமார் பத்து நிமிடங்கள் பேசிய ரஜினி இறுதி ஐந்து நிமிடங்கள் தமிழில் பேசினார்.
‘தமிழ்ப்படங்கள் இந்திய லெவலை என்றோ எட்டிவிட்டன. ஆனால் இந்த 2.0’ இண்டர்நேஷனல் லெவல் படமாகும். குழந்தைகள், பொதுமக்கள், அறிவுகள் போலி அறிவிஜீவிகள் என்று எல்லா மட்டங்களின் எதிர்பார்ப்பையும் தனது படத்தில் பூர்த்தி செய்பவர் ஷங்கர். அவரை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்றே சொல்லலாம்.
காலா’ படப்பிடிப்பு முடிந்து நான் உடல்நலம் குன்றியிருந்த நிலையில் என் உடல் ஒத்துழைக்காத நிலையில் ஏழு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு முடிந்திருந்த ‘2.0’வின் படத்தில் திடர்ந்து நடிக்க முடியாதோ என்ற பயம் எனக்கு வந்தது. அதை ஷங்கரிடமும், தயாரிப்பாளர் சொல்லி,’நான் வாங்கிய அட்வான்ஸையும், இதுவரை படத்துக்கு செலவான தொகையையும் கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னேன். அதற்கு ஷங்கர் நான் எவ்வளவு நாள் வேண்டுமானாலும் காத்திருக்கிறேன். உங்களைத்தவிர வேற யாரையும் வச்சி இந்தக் கதையை யோசிக்கமுடியாது சார் என்றார். தயாரிப்பாளர் சுபாஷ்கரனோ 4 மாசம் உங்களுக்காக 4 வருஷம் கூட காத்திருக்கத்தயார் சார்ன்னு சொன்னார்.
நல்ல நண்பர்கள் வாழ்க்கையில கிடைக்கிறது கோஹினூர் வைரம் கிடக்கிறமாதிரி. அந்தமாதிரி ஒரு கோஹினூர் வைரம் தான் இந்த சுபாஷ்கரன். ‘சிவாஜி’ பட்ஜெட் 2 மடங்கானப்ப எல்லாரும் பயந்தாங்க. எல்லோரும் பயந்ததை விட அந்தப்படம் ரெண்டு மடங்கு கலெக்ட் பண்ணுச்சி. அடுத்து ‘எந்திரனுக்கும் அதே பிரச்சினை. அந்தப்படமும் நல்ல வசூல் பண்ணிச்சி. இப்ப ‘2.0’ 300 கோடியில பிளான் பண்ண ஆரம்பிச்சி 550 கோடியிலவந்து நிக்குது.
படம் ரொம்ப லேட்டாயிருச்சே. எப்பிடி இருக்கும் வருமா வராதான்னு ஏகப்பட்ட என்கொயரி. லேட்டா வந்தாலும் கரெக்டா வரணும். [பலத்த விசில் கைதட்டல்] நான் படத்தைப் பத்தி மட்டும்தான் சொல்றேன். அதுதான் ‘2.0’ என்ற ரஜினி ஷங்கர் கமலை வைத்து அடுத்து இயக்கப்போகும் ‘இந்தியன்2’வுக்கு தனது வாழ்த்துகளைக் கூறி உரையை முடித்துக்கொண்டார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.