பாகுபலி 2 விடம் சரண்டரான 2.O... நான்கு நாட்களாக நாக்கு தள்ளி அள்ளிய வசூல் விவரம் இதோ...

By sathish kFirst Published Dec 3, 2018, 11:45 AM IST
Highlights

உலகம் முழுவதும் கடந்த வியாழக்கிழமை வெளியான ‘2.O’ இந்தியாவில் மொத்தமாக  400 கோடி  வசூல் செய்துள்ளது.  இந்த படத்தின் ஹிந்தி  பதிப்பு வடக்கு மற்றும் மும்பையில் 95 கோடி வசூல் செய்துள்ளது.

பிரமாண்ட இயக்குனர்  ஷங்கர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் ஜாம்பவான் அக்ஷய் குமார் கூட்டணியில், லைகா சுமார்  600 ரூபாய் தயாரிப்பில்  உருவாகியுள்ள திரைப்படம் ‘2.0' இந்த படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் சுமார் 10000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ‘2.O’ படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலிக்கும் எனவும், உலகம் முழுவதும் ரூ.135 கோடி வசூலிக்கும் எனவும், குறிப்பாக பாகுபலி 2 படத்தை விட அதிக தியேட்டர்களில் வெளியானதால் முதல் நாள் வசூலில் பாகுபலி 2வை  வீழ்த்தி புதிய வசூல் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.

crosses the 50 Cr Gross mark at the AP/TG Box office..

Final weekend nos by this afternoon.. AP/TG

— Ramesh Bala (@rameshlaus)

இதற்கு முன்னர் முதல் நாளில் பாகுபலி 2 ரூ.125 கோடி வசூல் செய்தது. ஆனால், இந்தியாவில் மட்டும் வெறும் ரூ.95 கோடி வசூல் செய்தது. இதனால் ‘2.O’ படம் பாகுபலி 2 படத்தை முறியடிக்க முடியவில்லை. சர்கார் முதல் நாளில் ரூ.70 கோடி வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது.தமிழ்நாட்டில் இந்த படம் வெளியான கடந்த வியாழக்கிழமை மாலை 12 முதல் 13 கோடி வசூல் செய்தது.  தெலுங்கு பதிப்பில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நான்கு நாள் முடிவில் மொத்தம் 50  கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

puts up a SUPERB TOTAL in its *extended* opening weekend... Biz on Day 3 and Day 4 specifically was fantastic... Thu 19.50 cr, Fri 17.50 cr, Sat 24 cr, Sun 34 cr. Total: ₹ 95 cr. India biz. Note: HINDI version.

— taran adarsh (@taran_adarsh)

இந்த படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 200 கோடியை கடந்து விட்டது. மேலும் சர்வதேச அளவில் நான்கு நாட்களை அதிக வசூல் செய்துள்ளது. மொத்தமாக உலகளாவிய வசூல் நிலவரத்தை பார்க்கும் போது, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 400 கோடியை கடந்து விட்டது.

click me!