கூட்டமே இல்ல ஆனாலும் வசூல் இம்புட்டா? சூப்பர்பா...

By sathish kFirst Published Dec 18, 2018, 9:40 AM IST
Highlights

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாணட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட 2.0  படம் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

லைகா என்ற பிரமாண்ட நிறுவனம். அதிக பட்ஜெட், பிரமாண்ட இயக்குனர் என ஆரம்பத்திலேயே இசை வெளியீடு, ட்ரெய்லர் வெளியீட்டை மும்பையிலும், வெளிநாடுகளிலும்  நடத்தி இது கட்டு கட்டா துட்டு கொட்டி எடுக்கிறோம் என தம்பட்டம் அடித்தார்கள். படத்தின் வியாபாரம் இம்புட்டா? கணக்கே பண்ணமுடியலையே என கப்ஸா விட்டார்கள் ஆனால்,  அப்படி ஓர் ஆச்சரியத்தை  வசூலில் இல்லை.  

படம் வெளியான நான்கு நாட்களில் ரூ.400 கோடி இரண்டு வாரங்களில் ரூ.500 கோடி என தயாரிப்பு தரப்பு வெளியிட்ட தகவல்  எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை, ஆனால் தியேட்டரில் கூட்டத்தை பார்த்தால் அவர்கள் ஏன் இப்படியான தகவலை விடுகிறார்கள் என தோன்றுகிறது. 

2.O படம் 11 நாட்களில் தமிழ்நாட்டில் திரையரங்குகள் மூலம் 80.3 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இவற்றில் தயாரிப்பு தரப்பு அல்லது விநியோகஸ்தர்களுக்குக் கிடைத்திருப்பது 46.4 கோடி ரூபாய் ஆகும். இந்தியா முழுவதும் 404.3 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது. தயாரிப்பு தரப்புக்கு 205.4 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் இந்தப் படம் 11 நாட்களில் 530.7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால், தயாரிப்பு தரப்புக்கு 264.1 கோடியே கிடைத்துள்ளது. 

இன்னும் தமிழகம் முழுவதும் சுமார் 398 திரைகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது என தெரிகிறது. சென்னை மாநகரில் மட்டும் இன்னும் சுமார் 40 தியேட்டர்களில் 80 திரைகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளிலும் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.


 
இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, உலகம் முழுவதும் தமிழ் மொழி பதிப்பில் ரூ.461 கோடி தெலுங்கு, இந்தி பதிப்புகள் சேர்ந்து ரூ.285 கோடி என மொத்தம் ரூ.750 கோடியை வசூலித்திருக்கிறதாம்.  அடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு புதிய படங்கள் ரிலீஸ் ஆவதால் 75  சதவிகித திரையரங்கில் படத்தை தூக்கிவிடுவார்கள்.  மிச்சம் இருக்கும் தியேட்டர்களில் ஒன்னு ரெண்டு ஷோ ஓட்டினாலும்  ரூ.1000 கோடி வசூலை அள்ளுவது சிரமம் தான்.

click me!