
கடந்த ஒரு வார காலமாக இணையங்களில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிவரும் இளையராஜா ‘96 பட சர்ச்சைகளுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
ஒரு நாளிதழுக்கு அளித்த வீடியோ பேட்டியில் தனது பாடல்களை இந்தக் கால இயக்குநர்கள் பயன்படுத்துவது குறித்து பதிலளித்திருந்த ராஜா ‘அது ஆண்மையற்ற செயல்’ என்று கூறியிருந்தார். தற்போது ராஜாவின் பேட்டியில், அவரது வேண்டுகோளின்படி அந்த சர்ச்சை பதில் நீக்கப்பட்டுள்ள நிலையிலும் அது தொடர்பான சர்ச்சைகள் நீண்டுகொண்டே இருக்கின்றன.
இந்நிலையில் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் ‘என்றும் நான் ராஜா ரசிகன்’ என்று பதிவிட்டுள்ள ‘96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ராஜாவின் தளபதி பட பாடலான ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலைத் தான் உருகி உருகி வயலினில் வாசிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கோவிந்த் வசந்தாவின் அப்பதிவைப் பாராட்டி கமெண்ட் போட்டுவரும் ராஜா ரசிகர்கள்,...Replying to @govind_vasantha
கோபப்பட்டு பேசினாலும் "அப்பா, அப்பாதான்"னு சொல்லும் மகனின் அன்பும், மரியாதையும்... மீடியாக்களுக்கு வைக்கும் முற்றுப்புள்ளி...என்று பதிவிட்டுவருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.