உலகளவில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலியாக உள்ள 6 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருக்கின்றன. இந்த கோயில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் அவ்வபோது நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் உலகளவில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் காலியாக உள்ள 6 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக கருதப்படும் இந்த கோயிலில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், என்ன தகுதி என்பதை விரிவாக பார்க்கலாம்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மொத்தம் 6 மின் கம்பி உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஐடிஐ (எலக்ட்ரிக்கல்) முடித்திருக்க வேண்டும். மேலும் மின் உரிமம் வழங்கல் வாரியம் அளிக்கும் ’H” உரிம சான்றிதழை வைத்திருக்க வேண்டும். ஐடிஐ தவிர பிற கல்வி தகுதி கொண்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 16,000 முதல் ரூ.52,400 வரை சம்பளம் வழங்கப்படும். 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 30.10.2023-க்குள் தபால் வழியில் இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருச்செந்தூர், 628215, தூத்துக்குடி.
தொலைபேசி எண் : 04639 242221
டைப்பிங் தெரியுமா? சென்னையிலேயே சூப்பர் வேலை ரெடி! மத்திய அரசு பணிக்கு உடனே அப்ளை பண்ணுங்க!
தேர்வு முறை :
தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் அரசு அதிகாரிகளிடம் இருந்து பெற்ற நன்னடத்தை சான்றிதழையும் விண்ணப்பத்துடன் சேர்த்து அனுப்பவேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்