டைப்பிங் தெரியுமா? சென்னையிலேயே சூப்பர் வேலை ரெடி! மத்திய அரசு பணிக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

Published : Oct 05, 2023, 01:13 PM ISTUpdated : Oct 05, 2023, 01:29 PM IST
டைப்பிங் தெரியுமா? சென்னையிலேயே சூப்பர் வேலை ரெடி! மத்திய அரசு பணிக்கு உடனே அப்ளை பண்ணுங்க!

சுருக்கம்

CLRI மத்திய அரசு நிறுவனத்தில் 81 ஆயிரம் சம்பளத்துடன் வேலையில் சேர்வதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் 8ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது.

சென்னையில் உள்ள CLRI மத்திய அரசு நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தக் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைவான அவகாசமே உள்ளதால் விருப்பமும் தகுதியும் இருப்பவர்கள் விரைவாக விண்ணப்பிக்க வேண்டும்.

சென்னை அடையாறு பகுதியில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (Central Leather Research Institute) மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப் பணியிடங்கள்:

இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் ஜூனியர் ஸ்டெனோகிராபர் (Junior Stenographer) எழுத்து தேர்வு அடிப்படையில் நேரடி நியமனம் செய்யப்படுவார்கள். மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் பொது பிரிவில் 3, ஒபிசி பிரிவில் 1, EWS பிரிவில் 1 என்ற ஒதுக்கப்பட்டுள்ளன.

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023: இந்திய அணி விளையாடும் போட்டிகள் - முழு விவரம்

கல்வித்தகுதி:

12ஆம் வகுப்பு படிப்பை முடித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஸ்டெனோகிராபி திறன் இருப்பதும் அவசியம். ஒரு நிமிடத்தில் குறைந்தது 80 வார்த்தைகளை டைப் செய்யத் தெரிந்திருப்பதும் முக்கியம்.

வயது வரம்பு:

08.10.2023 அன்று 27 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டுமே இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க முடியும். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு கொடுக்கப்படும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்:

இந்த வேலையில் சேர்பவர்களுக்கு மத்திய அரசின் லெவல் 4 பணியாளர்களுக்கும் வழங்கப்படும் சம்பளம் கிடைக்கும். அதாவது ரூ.25,500 முதல் ரூ.81,100 வரை மாத ஊதியம் கிடைக்கும். எழுத்துத்தேர்வு, திறனறி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார். இரு தேர்வுகளும் சென்னையில் நடத்தப்படும். அதற்கான தேதி, நேரம் போன்ற விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படும்.

ரோஜாவின் ஆபாசப் படத்தை முழுமையாக வெளியிடுவோம்: தெலுங்கு தேசம் கட்சி மகளிரணி மிரட்டல்

விண்ணப்பிப்பது எப்படி?:

ஆன்லைனில் https://jsa.clri.org/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்குச் சென்று அக்டோபர் 8ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.10.2023

இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம்.

https://clri.org/docs/2022/news/Jr_Steno_Advertisement_No.01-2023_Final.pdf

PREV
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now