ரூ.67,000 சம்பளத்தில் மத்திய அரசு பணி.. யாரெல்லாம் தகுதி.. ? எப்போது வரை விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம்

By Thanalakshmi V  |  First Published Aug 1, 2022, 2:31 PM IST

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய வன விலங்கு நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 


இந்திய வன விலங்கு நிறுவனத்தில் (wildlife institute of india) யில் காலியாக உள்ள project Associate, project scientist ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவது ஒரு பிரவில் முதுகலைப்பட்டம் (Msc, Master Degree) பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:காலியாக 1,089 அரசு பணியிடங்கள்.. நவம்பர் 6 ஆம் தேதி எழுத்துத் தேர்வு.. எப்போது..? எப்படி விண்ணப்பிப்பது..?

Tap to resize

Latest Videos

மேலும் இந்த பதவிகளுக்கு மாதந்தோறு சம்பளமாக ரூ.20, 000 முதல் 67,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் அடுத்த மாதம் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை இந்த பணியிடங்களுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

மேலும் படிக்க:அனைத்து ரக நூல் விலையும் கிலோவிற்கு ரூ30 குறைவு.. ஜவுளித்துறையில் புதிய ஆர்டர்கள் அதிகரிக்க வாய்ப்பு..

தங்களது விண்ணப்பிங்களை registrarpr@wii.gov.in  மற்றும் rc@wii.gov.in ஆகிய மின்னஞ்சலுக்கு செலுத்த வேண்டும். இப்பணி குறித்தான வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை Wildlife Institute of India, an Autonomous Institute of MoEF, Govt. of India (wii.gov.in) என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துக் கொள்ளலாம். 

கூடுதல் தகவல்கள்:

1,முதலில் கொடுக்கப்பட்டுள்ள Wildlife Institute of India, an Autonomous Institute of MoEF, Govt. of India (wii.gov.in) " target=""rel="dofollow">Wildlife Institute of India, an Autonomous Institute of MoEF, Govt. of India (wii.gov.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். 

2,பின்னர் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களுக்கு ஏற்ற தகுதி இருக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும். 

3,பின் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, மின்னஞ்சல் செய்ய வேண்டும். 

4, பின்னர் தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்

click me!