TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு முடிவுகள் எப்போது ரிலீஸ் தெரியுமா? முழு விபரம்

Published : Apr 19, 2023, 10:14 AM IST
TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு முடிவுகள் எப்போது ரிலீஸ் தெரியுமா? முழு விபரம்

சுருக்கம்

டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் பல்வேறு துறைகளின் தேர்வுகளை நடத்தி, காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. அனைவராலும் தற்போது பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட குரூப் 4 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு நடைபெற்றது. 92 பணியிடங்களை நிரப்புவதற்கான இந்த தேர்வை 1,90,957 பேர் எழுதியிருந்தனர். 

5 மாதங்களை கடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் வெளியாகாமல் இருந்ததால் தேர்வு எழுதியவர்கள் கவலையடைந்தனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் குரூப் 7 பி மற்றும் குரூப் 8 தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும். அதேபோல குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும். மேலும், இந்து சமய அறநிலையத்துறையில் கிரேடு 3 மற்றும் கிரேடு 4 பதவிகளுக்கான தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அரசுத் துறைகளில் உள்ள 5,446 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக நடந்த  குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்தாண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்று தேர்வு முடிவுகள் நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதில் 57,641 பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து  இவர்களில்  55,071 பேர் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். 

இந்த தேர்வு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே போட்டித்தேர்வர்கள் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் விரைவில் வெளிவர இருப்பதால் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இதையும் படிங்க..ஏப்ரல் 18 & 19 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம் உள்ளே!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

UPSC Exam: இ-சம்மன் லெட்டர் என்றால் என்ன? நேர்காணலுக்கு ஏன் முக்கியம்?
Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!