ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் இலவசமாக சேர வேண்டுமா? முழு விபரம் உள்ளே!!

By Raghupati R  |  First Published Apr 19, 2023, 9:00 AM IST

சென்னை தரமணியில் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்தஜோதி வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  “சென்னை தரமணியில் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் செயல்படுகிறது.

இந்த நிறுவனத்தில் 12 ஆம் வகுப்புமுடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சார்ந்தவருக்கு பிஎஸ்சி 3 வருட முழுநேர பட்டப்படிப்பு, ஒன்றரைஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டயப் படிப்பு, 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவுதயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினைஞர் படிப்பு ஆகியவற்றில் சேர்ந்து படிக்க வழிவகை செய்யப்படும்.

Tap to resize

Latest Videos

விண்ணப்பதாரர் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 3 வருட முழுநேர பட்டப் படிப்பு (பிஎஸ்சி) பயில தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (என்சிஎச்எம் ஜெஇஇ) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் சென்னையில் வழங்கப்படுகிறது. 

இதையும் படிங்க..400 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் நிங்குலூ ஹைபிரிட் சூரிய கிரகணம்.. எங்கு, எப்போது காணலாம் - முழு விபரம்

பயிற்சி பெற விரும்புவோர் (www.tahdco.com) என்ற இணையதள முகவரியில் பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் 2023-24-ம்ஆண்டு நடைபெறும் தேர்வுக்கு ஏப்ரல் 27க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 2524 6344 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதையும் படிங்க..போட்டித் தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

click me!