போட்டித் தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் எழுதலாம்: மத்திய அரசு அறிவிப்பு

By SG Balan  |  First Published Apr 18, 2023, 2:58 PM IST

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் இனி ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமின்றி தமிழ் உள்பட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும்.


மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளை ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமின்றி 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த முடிவின்படி, இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒடியா, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்பூரி மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளில் வினாத்தாள் அளிக்கப்படும்.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு கிடைப்பதை உறுதிசெய்யவும், மொழித் தடையின் காரணமாக யாரும் உரிமையை இழக்கக் கூடாது என்பதற்காகவும் மத்திய அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது என அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

Tap to resize

Latest Videos

மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவின் மூலம் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் தங்கள் தாய்மொழி அல்லது பிராந்திய மொழியில் தேர்வை எழுதுவது அவர்களின் வெற்றி வாய்ப்புகளை மேம்படுத்தும்.

டிஎன்பிஎஸ்சியில் காத்திருக்கும் சூப்பர் வேலை.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்

மத்திய பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தி தவிர மற்ற மொழிகளில் நடத்த வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன. இதுகுறித்து ஆலோசிக்க மத்திய அரசு ஒரு நிபுணர் குழுவை நியமித்தது. அந்தக் குழு தேர்வு வாரியங்கள் நடத்தும் தேர்வுகளின் திட்டம் மற்றும் பாடத்திட்டத்தை மதிப்பாய்வு செய்தது.

அந்த நிபுணர் குழு அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகளை அளித்தது. இந்தியா பல மொழிகள் பேசும் நாடாக இருப்பதால், 12 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்வுகளை பல மொழிகளில் நடத்துவது தகுதியானதாக இருக்கும் என்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs), வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆகியவை நடத்தும் தேர்வுகளை 14 மொழிகளில் நடத்தத் தொடங்கலாம். பின்னர், அரசியலமைப்புச் சட்டத்தின் அட்டவணை VIII இல் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் படிப்படியாக அதிகரிக்கலாம் என்றும் அந்த நிபுணர் குழு கூறியது.

நிபுணர் குழுவின் இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அதற்கான வழிமுறைகளை எஸ்எஸ்சியைக் கேட்டுக்கொண்டது. அதன்படி, வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) / ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs) நடத்தும் பல்நோக்குப் பணியாளர் (MTS) வேலைக்கான தேர்வை 15 மொழிகளில் (13 பிராந்திய மொழிகள் + இந்தி + ஆங்கிலம்) நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

SSC GD கான்ஸ்டபிள் உடல் தகுதித்தேர்வு: அட்மிட் கார்டு குறித்த முக்கிய அறிவிப்பு!!

click me!