சந்திரயான்-3 வெற்றியால் ஊக்கம் பெற்று இஸ்ரோவின் விண்வெளி விஞ்ஞானிகளாக உருவாக விரும்பும் அந்த மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழி என்ன என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
சந்திரயான்-3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் மென்மையான தரையிறக்கம் செய்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையை இந்தியா அடைந்ததற்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்தன.
மாணவர்களிடையே விண்வெளி ஆய்வுகள் குறித்து ஆர்வத்தைத் தூண்டும் வகையில், இந்தியாவில் உள்ள பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கும் காட்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்தன. சந்திரனின் மேற்பரப்பில் சந்திரயான்-3 விண்ணில் இறங்கியதைப் பார்த்த பல மாணவர்கள் எதிர்காலத்தில் இஸ்ரோவில் விண்வெளி விஞ்ஞானி ஆக வேண்டும் என்று கனவு காணத் தொடங்கியுள்ளனர்.
undefined
இஸ்ரோவின் விண்வெளி விஞ்ஞானிகளாக உருவாக விரும்பும் அந்த மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழி என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
மத்திய அரசு நிறுவனத்தில் எக்கச்சக்க வேலைவாய்ப்பு! 1764 காலிப் பணியிடங்களுக்கு இப்பவே அப்ளை பண்ணுங்க!
10ஆம் வகுப்புக்குப் பிறகு:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் விஞ்ஞானியாக ஆர்வமுள்ளவர்கள் 10ஆம் வகுப்புக்குப் பிறகு அறிவியல் பாடத்தைத் தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். அவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தை கட்டாயப் பாடங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
10 ஆம் வகுப்புக்குப் பிறகு இந்தப் பாடங்களைப் படிப்பது மாணவர்கள் பொறியியல் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவும், அறிவியல் சார்ந்த B.Sc. பட்டப் படிப்புகளில் சேர்வதற்கான தேர்வில் தேர்ச்சி பெற உதவும்.
பிடெக், பிஎஸ்சிக்கான நுழைவுத் தேர்வுகள்
நீங்கள் BTech அல்லது BSc ஐப் படிக்க விரும்பினால், இந்தப் படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் நுழைவுத் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும். பி.டெக் படிக்க விரும்புபவர்கள் ஜேஇஇ மெயின் அல்லது ஜேஇஇ அட்வான்ஸ்டு படிக்க வேண்டும். ஜேஇஇ மெயின் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் பல்வேறு கல்லூரிகளுக்கு நடத்தப்படுகிறது.
இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (ஐஐடி) மாணவர் சேர்க்கைக்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு நடத்தப்படுகிறது. பிஎஸ்சி படிக்க விரும்புபவர்கள் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் (CUET) பங்கெடுக்கலாம்.
இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்
மாணவர்கள் இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தொடர்புடைய பிரிவுகளில் பி.டெக். (B.Tech) பட்டம் படிக்கலாம். விண்வெளி பொறியியல், மின்னணுவியல், தகவல் தொடர்பு பொறியியல் (ஏவியோனிக்ஸ்) ஆகியவற்றில் பிடெக் படிப்புகள் உள்ளன. இந்த பட்டப்படிப்புகளை 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த படிப்பாகவும் மேற்கொள்ளலாம். இதன் மூலம் ஒரே நேரத்தில் இளநிலை மற்றும் முதுநிலை (B.Tech. + Master of Science/Master of Technology) பட்டங்களைப் பெறலாம்.
இஸ்ரோ ஆட்சேர்ப்பு
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) சில நேரங்களில் கல்லூரிகளில் இருந்து நேரடியாக வளாகத் தேர்வு மூலம் வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. விஞ்ஞானி உட்பட இஸ்ரோவில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்பு இந்த ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது.
இதுபோன்ற வாய்ப்புகளை இஸ்ரோ அறிவிக்கும்போது விண்ணப்பதாரர்கள் விழிப்புடன் இருந்து அதனை பயன்படுத்த்கொள்ளலாம். இதுபோன்ற வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களைப் பெற இஸ்ரோவின் அதிகாரபூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்வையிட வேண்டும்.
நிம்மதியா வாழ விடுங்க... விமான நிலையத்தில் அஜித்துக்கு தொல்லை கொடுத்த ரசிகர்களுக்கு வசமான டோஸ்!