அலர்ட்!! UPSC மெயின் தேர்வு தேதிகள் அறிவிப்பு.. தேர்வர்கள் அறிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

By Thanalakshmi VFirst Published Aug 5, 2022, 12:38 PM IST
Highlights

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் (யுபிஎஸ்சி) குடிமைப்பணி தேர்வில் முதன்மைத் தேர்வுகள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் குடிமைப்பணி தேர்வுகள் முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3 கட்டங்களாக நடைபெறும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. 
 

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் (யுபிஎஸ்சி) குடிமைப்பணி தேர்வில் முதன்மைத் தேர்வுகள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் குடிமைப்பணி தேர்வுகள் முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என 3 கட்டங்களாக நடைபெறும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. 

மேலும் படிக்க:முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்கள் 2,207லிருந்து 3,237 ஆக அதிகரிப்பு… அறிவித்தது டி.ஆர்.பி!!

நாடு முழுவதும் 77 நகரங்களில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு நூழைவுச்சீட்டு கடந்த மே மாதம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தாண்டு காலியாக உள்ள 861பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பாணையை கடந்த பிப்ரவரி மாதம் யுபிஎஸ்சி வெளியிட்டது. தொடர்ந்து, இந்தியன் ரயில்வேயின் ஐஆர்எம்எஸ் குரூப்-ஏ பதவிகளில் உள்ள 150 பணியிடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக காலிபணியிடங்கள் எண்ணிக்கை 1,011-ஆக உயர்த்தப்பட்டது. ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்கும் தேர்வர்கள், யூபிஎஸ்சி தேர்வை எழுதலாம்.

மேலும் படிக்க:மாணவர்கள் கவனத்திற்கு !! அரசு கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு.. மாணவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவை ?

நாடு முழுவதும், முதல்நிலை தேர்வை ஜூன் மாதம் தொடக்கத்தில் யுபிஎஸ்சி நடத்தியது. 11.52 லட்சம் பேர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், வெறும் 17 நாட்களுக்கு தேர்வு முடிவுகள் இறுதி செய்யப்பட்டு, வெளியிடப்பட்டது. பொதுவாக, முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாக 40 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படும். இந்தாண்டு, 13,090 பேர் முதன்மைத் தேர்வுக்கு  தகுதி பெற்றுள்ளனர். அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு தேதி குறித்த அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 16, 17, 18 மற்றும் 24, 25-ம் தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும் மதியம் 2 முதல் 5 மணி வரையிலும் என இரண்டு வேளையிலும் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாள் 1 முதல் 5 வரையிலான தேர்வு செப்டம்பர் 16,17,18 ஆகிய தேதிகளிலும் இந்திய மொழித் தேர்வு செப்., 24 ஆம் தேதியிலும், விருப்ப பாடங்களுக்கான தேர்வு செப்.,25 ஆம் தேதியிலும் நடைபெறவுள்ளன. 

மேலும் படிக்க:தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?

இதுகுறித்து விவரங்களை www.upsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு மட்டுமே முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. எனவே விரைவில் முதனிலை தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 

click me!