முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான நியமனம்.. இந்தெந்த ஆவணங்களை உடனே விண்ணப்பிக்கவும்.. தேர்வு வாரியம் அறிவிப்பு

Published : Aug 20, 2022, 06:06 PM IST
முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான நியமனம்.. இந்தெந்த ஆவணங்களை உடனே விண்ணப்பிக்கவும்.. தேர்வு வாரியம் அறிவிப்பு

சுருக்கம்

வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான விண்ணப்ப படிவில் கல்வித் தகுதியில் தமிழ்வழியில் படித்ததாக குறிப்பிட்டவர்கள், அதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.   

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,” கடந்தண்டு செப்டம்பர் மாதம், 2020-21 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்/ உடற்கல்வி இயக்குநர் நிலை 1/ கணினி பயிற்றுநர் நிலை -1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இந்தாண்டு  பிப்ரவரி மாதம் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை கணினி வழித்தேர்வுகள் (Computer Based Examination) நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 04.07.2022 அன்று வெளியிடப்பட்டன.

தற்போது விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அறிவிக்கையின் போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்று உள்ளதாக சில விண்ணப்பதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:அதிர்ச்சியில் மக்கள் !! ஆவின் பாலில் தண்ணீர் கலந்து மோசடி.. கூட்டுறவு சங்க தலைவர் பதவி ரத்து..

ஆனால், அதற்குரிய ஆவணங்களை விண்ணப்பிக்கும் போது முறையாக பதிவேற்றம் செய்யவில்லை. எனவே முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், 1ம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு 11-12ம் வகுப்பு, டிப்ளமோ படிப்பு, இளங்கலைப் பட்டம் (UG Degree), முதுகலைப் பட்டம் (PG Degree)  கல்வியியல் இளங்கலைப் பட்டம் (B.Ed. Degree)  மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தவர்கள் இளங்கலைப் பட்டம் மற்றும் முதுகலை (B.Ed. Degree மற்றும் MPEd. Degree) என தாங்கள் தமிழ்வழியில் பயின்றதற்கான அனைத்து ஆவணங்களையும் உரிய அலுவலரின் ஒப்புதல் பெற்று அறிவிக்கையில் தெரிவித்துள்ளவாறு உரிய படிவத்தில் பெற்று சமரிப்பிக்குமாறு  தெரிவிக்கப்படுகிறது. 

இதர வெவ்வேறு படிப்புகளை தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் படிவம் விண்ணப்பத்தில் ஏற்கனவே, தமிழ்வழி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கை 'ஆம்' என பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே இவ்வாய்ப்பு வழங்கப்படும். எனவே, மனுதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தில் உள்ள இவ்விவரத்தினை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:தேர்வர்களே அலர்ட்.. இன்னும் 2 நாட்கள் தான் கால அவகாசம்.. குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

PREV
click me!

Recommended Stories

தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை! தபால் துறையில் குவிந்து கிடைக்கும் 30,000 வேலைவாய்ப்பு!
காலேஜ் சேர்றதுக்கு முன்னாடி இதை செக் பண்ணுங்க! மாணவர்களுக்கு CBSE எச்சரிக்கை!