தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமானது காலியாக உள்ள 155 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: ஆசிரியர் தேர்வு வாரியம்
மொத்த காலி பணியிடங்கள்: 155
undefined
Senior Lecturers - 24
lecturers- 82
junior Lecturers - 49
பணியின் பெயர்: Senior Lecturers, Lecturers , junior Lecturers
விண்ணப்பிக்கும் முறை:
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்தினால் போதும். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
மேலும் படிக்க:ரூ. 56,000 சம்பளத்தில் இந்திய கடற்படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. நாளை தான் கடைசி தேதி.
கல்வித்தகுதி:
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பலகலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாட பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் மற்றும் குறைந்தது 55 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.இடி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் இளநிலை மற்றும் முதுநிலை பட்டம் ஒரே பாடத்தில் படித்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவம்:
முதுநிலை விரிவுரையாளர் பணிக்கு ( Senior Lecturers) விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
விண்ணப்பத்தாரர்கள் 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.36,400 யிலிருந்து ரூ.1,15,700 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்படும். எழுத்துத் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:ரூ.61,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. நாளை தான் விண்ணப்பிக்க கடைசி நாள்.. முழு விவரம்