10ம் வகுப்பு போதும்.. மாதம் ரூ.50,000 வரை சம்பளத்தில் அமுல் நிறுவனத்தில் சூப்பர் வேலை !

By Raghupati RFirst Published Sep 5, 2022, 4:36 PM IST
Highlights

பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்காக வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது அமுல் நிறுவனம்.

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு, கல்வி, தேர்வு முறை, விண்ணப்பிக்கக்கூடிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற பிற விவரங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நிறுவனத்தின் பெயர் - அமுல்

விண்ணப்பிக்கும் முறை - ஆன்லைன் 

விண்ணப்ப கட்டணம் - இல்லை


பதவிகளின் பெயர் மற்றும் சம்பள விவரங்கள் :

1. கணக்கு உதவியாளர் 

அனுபவம் - 0 முதல் 2 ஆண்டுகள்

சம்பளம்- ₹ 5,00,000 - 5,50,000 PA.

இடம்- ஹைதராபாத் / செகந்திராபாத்

 

2.விற்பனை பொறுப்பு

அனுபவம் - 1 முதல் 2 ஆண்டுகள்

சம்பளம்- ₹ 5,00,000 - 7,00,000 PA.

இடம் - ஜலந்தர், காங்க்ரா, டேராடூன், சிம்லா, ஜம்மு

மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு

3. கணக்கு உதவியாளர்

அனுபவம் - 2 முதல் 4 ஆண்டுகள்

சம்பளம்- ₹ 5, 50,000 - 7, 50,000 PA.

இடம் - அமிர்தசரஸ்

யார் விண்ணப்பிக்கலாம் ? :

இந்தியா முழுவதிலும் உள்ள விண்ணப்பதாரர்கள் அமுலில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.  பதவிகள் மற்றும் தகுதிக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

 கல்வித் தகுதி :

10வது, ஐடிஐ, டிப்ளமோ, 12வது, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு ஆகியவற்றை முடித்த பிறகு இந்த ஆட்சேர்ப்புக்கு தகுதியுடையவர்கள் ஆனால் அது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து இணையானதாக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் செய்திகளுக்கு..அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!

விண்ணப்பக் கட்டணம் : 

GEN/OBC க்கு - இலவசம், SC/ST/ - இலவசம், PWD/PH/பெண்கள் - இலவசம். இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் இலவசம் ஆகும்.

தேவையான ஆவணங்கள் :

1. கல்வி மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் சான்றிதழ்கள்.

2. ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, பான் போன்ற அடையாளச் சான்று தேவை.

3. ரெஸ்யூம்/சிவி

4. புகைப்படம்

5. கையொப்பம்

தேர்வு முறை :

விண்ணப்பத்தின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டு தேர்வு / நேர்காணலின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !

click me!