தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) ஆனது காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்:
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB)
காலி பணியிடங்கள்:
Scientist – I பதவியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிக்கும் தேதி:
NDDB யின் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. அதனால் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் படிக்க:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. உடனே விண்ணப்பியுங்கள்
வயது வரம்பு:
விண்ணப்பத்தாரர்களின் வயது 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் Chemistry, Dairy, Bio Analytical, Food Technology, Food Science, Biotechnology பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 7 ஆண்டுகள் வரை பணி செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு:
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் காலியாக Scientist – I பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் FSSAI – Food Analyst தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு.
சம்பள விவரம்:
காலி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களின் தகுதி, அனுபவம் மற்றும் திறமையின் அடிபடையில் மாத ஊதியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மேலும் படிக்க:ரூ.61,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. நாளை தான் விண்ணப்பிக்க கடைசி நாள்.. முழு விவரம்