TNTET 2022: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி வெளியானது.. தேர்வு குறித்த முழு விபரம் உள்ளே.!!

Published : Sep 23, 2022, 07:25 PM IST
TNTET 2022: ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தேதி வெளியானது.. தேர்வு குறித்த முழு விபரம் உள்ளே.!!

சுருக்கம்

தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி 2022-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத விரும்புவோர் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகளுக்கு..அண்ணா பல்கலைக்கழகத்தில் அருமையான வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க !!

தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி உடன் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து சிலர் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனைத்தொடர்ந்து ஏப்ரல் 26ம் தேதி வரை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வில், முதல் தாளுக்கு 2,30,878 பேர் மற்றும் இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என 6,32,764 என மொத்தம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை ஆகஸ்ட் 25 தேதி முதல் 31ம் தேதி வரை நடத்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. பின்பு தேதி மாற்றியது.

மேலும் செய்திகளுக்கு..டிகிரி இருந்தால் போதும்.. மாதம் 70 ஆயிரம் சம்பளத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை வாய்ப்பு

இந்நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வு தேதி குறித்த அறிவிப்பை TRB வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, TRB தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நடப்பு ஆண்டு முதல் இத்தேர்வை கணினி வழியில் நடத்த உள்ளதாக தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. அனைத்து தேர்வர்களும் கணினி வழித்தேர்வை (Computer Based Examination) பயிற்சி தேர்வுகளாக மேற்கொள்ள தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இதனை அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..இன்ஜினியரிங் முடித்தவர்களா நீங்கள் ? மத்திய அரசில் காத்திருக்கிறது அருமையான வேலைவாய்ப்பு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Job: ரயில்வேயில் 400 புதிய வேலைகள்! எழுத்துத் தேர்வு எப்போ தெரியுமா?
Job Vacancy: டிகிரி வேண்டாம், 10 ஆம் வகுப்பே போதும்! ரூ.57,000 சம்பளத்துடன் மத்திய அரசு பணி காத்திருக்கு.! Apply Now